என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
    X

    மாணவிகள் செயல்விளக்கம் அளித்த காட்சி.

    வாசுதேவநல்லூர் அருகே விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

    • அய்யாபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம் அளித்தனர்.
    • மண் மாதிரி எடுத்தல், அதன் பயன்கள் குறித்து மாணவிகள் விளக்கினர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அருகே அய்யாபுரம் கிராமத்தில் தனியார் விவசாய தோட்டத்தில் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    இதில் 9 பேர் கொண்ட குழு மாணவிகள் அம்ரிஷா, பிபினி, காவியா கிருஷ்ணா, கிருஷ்ண பிரியா, மனிஷா குளோரா, நஸ்ரின் பாத்திமா, ரோஷினி, சவுமியா, தங்ககீதா ஆகியோர் இணைந்து மண் மாதிரி எடுத்தல் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×