search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணி நிறைவு"

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது.
    • ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில் கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்திற்கு சொந்தமான காரைக்கால் அம்மையார், சித்தி விநாயகர், பொய்யாத மூர்த்தி விநாயகர், அண்ணாமலை ஈஸ்வரர், கடைத்தெரு மகாமாரியம்மன் உள்ளிட்ட 8 கோவில்கள் இயங்கிவருகிறது. ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை அல்லது உற்சவம் நடைபெற்று முடிந்த காலம் இவற்றில் ஏதாவது ஒன்றில் இந்த தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களின் உண்டியல் எண்ணப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த மே மாதம் உண்டியல் எண்ணப்பட்டது.

    தொடர்ந்து, அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொள்வது என அறங்காவலர் குழு முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து இதற்கான பணி ஆணை பெற்று, உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் பணி தொடங்கியது. சுமார் 30 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாலை உண்டியல் எண்ணும் பணி நிறைவு பெற்றது. உண்டியலில் ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 130 இருந்தது, அத்தொகை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டதாக, கோவில் அறங்காவல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • ராஜபாளையம் ரெயில்வே மேம்பாலத்தில் தார்சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றது.
    • இரவு முழுவதும் எம்.எல்.ஏ. கண்காணித்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி-வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தபணிகளை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று இரவு முழுவதும் அங்கிருந்து கண்காணித்தார். இதைத்தொடர்ந்து தார்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது. இதுகுறித்து எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ரெயில்வே மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பணிகளை துரிதப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வழக்கம் போல் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தலாம். மேலும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகர் கோவில் வரையும் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகர் கோவில் விரைவு ரெயில், சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரெயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன. இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரெயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.

    மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரெயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.
    • வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி. என். பாளையம், கடம்பூர், தலமலை, விளாமுண்டி, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் குறித்து ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் என இரு முறை வனவிலக்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழை காலத்திற்கு முந்திய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி கடந்த ஜூன் 27-ந் தேதி தொடங்கியது.

    10 வனச்சரகங்களில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் 76 குழுக்களாக பிரிந்து வனவிலங்கு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டனர்.

    இதில் வன விலங்குகளில் எச்சம், கால்தடம் உள்ளிட்டவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜி.பி.எஸ். கருவி, காம்பஸ், வியூ பைன்டர், ரேஞ்ச் பைன்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடந்து வந்தது.

    மொத்தம் 6 நாட்கள் நடந்த கணப்பு எடுப்பு பணி நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் சென்னை தலைமை வன பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×