ரூ.84.90 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் - மண்டல தலைவர் தொடங்கி வைத்தார்

தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய தார்சாலை அமைக்கும் பணியை மண்டல தலைவர் இல. பத்மநாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்.
புதிய தார்சாலை அமைக்கும் பணியை மண்டல தலைவர் இல. பத்மநாதன் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்குட்பட்ட வேலன் நகர், தீபா நகர், திருகுமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.84.90 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.விழாவில் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாதன் கலந்துகொண்டு புதிய சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com