search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிகே வாசன்"

    • மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்கது.
    • மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் இழப்புக்கு நிவாரணம் பெற்றுத்தரவும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, படகுகளை மீட்கவும் மத்திய அரசு உரிய பேச்சுவார்த்தையை இலங்கை அரசிடம் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றதும், படகுகளை பறிமுதல் செய்ததும் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    தமிழக அரசு, தமிழக மீனவர்களின் பாதுகாப்பான மீன்பிடித்தொழிலுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவக்குடும்பங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.
    • கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம்.

    கோவை:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத் தொடர் நாளை காலை இருப்பதால் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாதம் 12-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இயக்கத்தின் பணிகள், தேர்தல் வியூகம், கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

    செயற்குழு கூட்டத்திற்கு பின்பு உறுப்பினர்களின் ஆலோசனைகளை கேட்டு தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக கட்சியிலிருந்து வெளிவரும்.

    கட்சியின் தலைவர் என்ற காரணத்தினால் என்னுடைய கட்சியின் இறுதி முடிவை என்னால் கூட சொல்ல முடியாது. செயற்குழு உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்கள் எல்லாம் கருத்துக்களை கூறிய பிறகு தான் முடிவு களை கூற முடியும். மற்ற கட்சிகளுக்காக நான் பேசுவதற்கு எந்த தேவையும் இல்லை, அவசியமும் இல்லை. அந்த அதிகாரமும் இல்லை.

    பாரதிய ஜனதா தலைவர்களை பாராளுமன்றத்தில் பார்ப்பதெல்லாம் வழக்கமான ஒன்றாகவே இருக்கி றது. அது புதிதல்ல. தேர்தல் குறித்து பேசுகின்ற நேரம், காலம் இருக்கின்ற போது அதைப் பற்றி பேச தானே செய்வோம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பா.ஜ.க.வில் குறிப்பிட்ட இடங்களை கேட்டதாக வந்த தகவல்கள் முற்றிலும் தவறானது.

    நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை ஆரம்பிப்பதற்கு எந்த துறையில் இருந்து வேண்டு மானாலும் வரலாம். அத ற்கு ஜனநாயகத்தில் எந்த தடையும் இல்லை, தடங்கலும் கிடையாது அதே நேரத்தில் ஜனநாயகத்தில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள். அவர்களது முடிவு தான் இறுதி முடிவு. மேலும் வாக்காளர்களின் எண்ணம் போல் செயல்பட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை 2-வது திட்டத்தில் இணைக்க வேண்டும். மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தி.மு.க. அரசு மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தை தொடங்கியதாகவே அர்த்தம். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.

    மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இந்தியா கூட்டணி தொடக்கத்திலேயே முரண்பாடுடன் தொடங்கப்பட்டது. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
    • நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.

    கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜேகே., புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.

    இதேபோல் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் தமிழர் திருநாள் கிராமிய விழா நடைபெற்றது. மாட்டு வண்டி பயணம், ஒயிலாட்டம், சிலம்பம், கபடி , கோலபோட்டி, கயிறு இழுத்தல் போட்டி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். முன்னதாக அவர் மாட்டு வண்டியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் பயணம் செய்து விழா மேடைக்கு வந்து அடைந்தார்.

    இதை தொடர்ந்து கயிறு இழுத்தல் போட்டியில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன், கட்சியின் மூத்த நிர்வாகி அணியில் இணைந்து போட்டியிட்டார். மறுமுனையில் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி உறுப்பினர்கள் ஒரு அணியாக கலந்து கொண்டனர். இரு அணிகள் மோதியதில் ஜி. கே.வாசன் அணி கயிறு இழுத்தல் போட்டியில் வெற்றி பெற்றது. தான் பெற்ற வெற்றியை இளைஞர் அணிக்கும் மாணவர் அணிக்கும் சமர்ப்பித்தார்.

    இதனை அடுத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் மற்றும் நல திட்ட உதவிகளை வழங்கினார். கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினர் மற்றும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்படுவது வதந்தி என ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். வதந்திக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்பது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது என்ற அறிவிப்பு, அவர்களுடைய உண்மையான முகத்தை காட்டுகிறது. நான் ஏற்கனவே சொன்னதைப் போல், நான் ராமர் கோவிலுக்கு செல்வேன் தரிசிப்பேன் . வருகின்ற 22-ந் தேதி என்னுடைய கட்சி தொண்டரின் திருமணத்தை நான் திருவாரூரில் நடத்தி வைக்கிறேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் சமயத்தில் நான் கோவிலுக்கு சென்று நிச்சயம் தரிசிப்பேன்.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பல வசதிகள் இருக்கலாம் , அதில் மாற்று கருத்து கிடையாது. அது எப்பொழுது வரவேண்டுமோ அப்பொழுது தான் வர வேண்டும். அங்கு மெட்ரோ ரெயில், போதிய அளவில் பஸ் போக்குவரத்து கிடையாது. விளம்பரத்திற்காக மக்களை அலைக்கழிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது.

    ஆட்சியாளர்களின் தவறை சாதாரண மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, தவறுகளுக்கான பாடத்தை அவர்கள் தங்களுடைய வாக்கின் மூலம் கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் செய்திருந்தார்.

    • கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
    • கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு வழங்க இருக்கும் பொங்கல் தொகுப்பானது விவசாயிகளின், பொது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் குறைந்த பட்சம் ரூ. 1,500 மற்றும் முழு கரும்பு ஒன்று அவசியம் இடம் பெற வேண்டும். குறிப்பாக இயற்கை சீற்றத்தால் சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட மற்ற மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழை, பெரு வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள், பொது மக்கள் பாதிக்கப்பட்டதை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப இந்த வருடப் பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பை சற்று கூடுதலாக கொடுக்க வேண்டும்.

    கரும்பை கட்டாயமாக விவசாயிகளிடம் இருந்து நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். பொங்கல் தொகுப்பில் உள்ளவை தரமானதாக, பயனுள்ள வகையில் இருப்பதை முன்னதாகவே தமிழக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் தரமற்ற பொருட்களும் இடம் பெற்றது போல் மீண்டும் நடைபெறக்கூடாது. மேலும் தமிழக அரசு, பொங்கல் தொகுப்பை உடனடியாக அறிவித்து, அதனை முன்னேற்பாடாக வாங்கி, இருப்பில் பாதுகாப்பாக வைத்து, பொங்கலுக்கு முன்னதாக கொடுக்க வேண்டும். தமிழக அரசு, தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் தொகுப்பை அறிவித்து, விரைவில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை.
    • 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 16, 17, 18-ந் தேதிகளில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி தீர்த்தது.

    இடைவிடாது பெய்த மழையால் தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.

    குறிப்பாக தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல், தென்திருப்பேரை, ஆறுமுகனேரி, காயல்பட்டிணம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நெல்லை- திருச்செந்தூர் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


    2 மாவட்டங்களிலும் ஏராளமான இடங்களில் பாலங்கள் உடைந்தும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் போக்குவரத்து தடைபட்டது. இதைப்போல மின்வினியோகம், தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    வெள்ள சேத பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் அறிவித்தார்.

    மேலும் மத்திய குழுவினரும், நெல்லை, தூத்துக்குடியில் ஆய்வு செய்த நிலையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சாலை, மின்வினியோகம், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் வெள்ளம் முழுமையாக வடியவில்லை. தூத்துக்குடி நகரில் புதிய பஸ்நிலைய பகுதிகள், குறிஞ்சி நகர், இந்திராநகர், பச்சாது நகர், பாரதிநகர், தங்கமணிநகர், காந்திநகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் இன்னும் வெள்ளநீர் முழுமையாக வடியவில்லை.


    சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் நீரில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கிடப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நகரில் பல இடங்களில் இயல்புநிலை திரும்பினாலும் வெள்ளம் வடியாத பகுதிகளில் 9-வது நாளாக இன்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் சாலையில் குளம் போல் வெள்ளநீர் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளநீரில் ஊர்ந்தபடி செல்கின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

    தொடர்ந்து வெள்ளத்தில் நடப்பதால் கால்களில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே இந்தப்பகுதிகளில் வெள்ளநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    புன்னக்காயல் உள்ளிட்ட சில கிராமங்களில் 8-வது நாளாக இன்றும் மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து பொதுமக்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். ஆனால் பலர் வீடுகள் இழந்தும், விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கடும் சேதம் ஏற்பட்டதால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    • 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
    • லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளமானது தாமிரபரணி ஆற்றில் கரை புரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தினால் ஆற்றில் குடிநீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த உறைகிணறுகள் மூழ்கியது. பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரையிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள் மூழ்கி அதில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதடைந்தன. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    மேலும் பல்வேறு வகையான கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் எடுத்துச்செல்ல ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த குழாய்களும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு சேதமடைந்ததால் குடிநீர் வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், ஒரு சில நாட்களுக்கு பிறகு தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலமாக குடிநீர் வினியோகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வெள்ளம் சற்று தணிந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளில் மோட்டார்கள் பழுது பார்க்கப்பட்டு குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக ஆறுகளில் உள்ள உறைகிணறுகளை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பணிகளை மேலும் துரிதப்படுத்த கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் தொழில்நுட்ப குழு வரவழைக்கப்பட்டது. அதன்படி 9 பேர் கொண்ட குழு வந்து 2 நாட்களாக குடிநீர் திட்டங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒரு சில இடங்களில் உறைகிணறுகளை சுற்றிலும் நீர் அதிகமாக இருந்தாலும், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொழில்நுட்ப குழுவினர் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு பணி செய்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    • வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று நெல்லை வந்தார்.

    அவர் பாளை வெள்ளகோவில் பகுதியில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அந்த பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் முடங்கிப் போய் உள்ளது. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக கொடுக்கக்கூடிய 6000 ரூபாயை ரேசன் கார்டு அடிப்படையாகக் கொண்டு கொடுக்காமல் கியாஸ் சிலிண்டர் முகவரிகளை கணக்கில் கொண்டு அதன்படி கொடுக்க வேண்டும்.

    மேலும் நிவாரணமாக கொடுக்கக்கூடிய ரூ.6 ஆயிரம் என்பது பொதுமக்களுக்கு போதாது. எனவே அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தினர் நேரடியாக சென்று விசாரித்து பாதிப்பை அறிந்து பொதுமக்களிடம் கேட்டு கொடுக்க வேண்டும். வானிலை மையத்தை தமிழக அரசு குறை சொல்லக்கூடாது. உலக அளவில் சவால் விடும் வகையில் இந்தியாவின் வானிலை மையம் நவீன கருவிகள் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
    • பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை கிடைப்பதில்லை.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நமது அன்றாட வாழ்க்கையில் விவசாயிகளின் பங்களிப்பு தான் முதன்மையானவை, முக்கியமானவை. நம் நாட்டில் உள்ள மக்களுக்கு உணவளிக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் விவசாயிகள் நாள்தோறும் மேற்கொள்ளும் பணிகள் மிகவும் இன்றியமையாதது. ஆனால் விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தொகை கிடைப்பதில்லை. விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களை விவசாயத்துறையில், விவசாயப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, விவசாயத் தொழிலை முன்னேற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னேற்பாடாக செய்ய வேண்டும்.
    • பால் மற்றும் மருத்துவ உதவிகள், மெழுகுவர்த்தி போன்ற அடிப்படை தேவைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வங்க கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது குமரி கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் அதிக கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தும், தமிழக அரசு முன்னேற்பாடாக இருந்ததாக தெரியவில்லை.

    சென்னையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை படிப்பினையாக கொண்டு உடனடியாக தென் மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை முன்னேற்பாடாக செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான, உணவும், குடிக்க தண்ணீர், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான பால் மற்றும் மருத்துவ உதவிகள், மெழுகுவர்த்தி போன்ற அடிப்படை தேவைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

    இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மக்களுக்கு உரிய எச்சரிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளையும், உதவிகளையும் துரிதமாக தமிழக அரசு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது.
    • பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் பால் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

    ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஆவின் நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, நமது மாநில பால் உற்பத்தியாளர்களிடமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, நுகர்வோரின் பால் தட்டுப்பாடும் விலகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×