search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: த.மா.க. யாருடன் கூட்டணி?
    X

    பாராளுமன்ற தேர்தல்: த.மா.க. யாருடன் கூட்டணி?

    • கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
    • நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.

    கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜேகே., புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.

    இதேபோல் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×