search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ்"

    • “கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை.”
    • தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்!

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    "கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை." "நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்."-என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர்!

    கிறித்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர். அவர்களுள் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால், "தமிழ் மாணவன்" என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு.போப், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைத்து, தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகராதி தந்து, "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், தமிழ் நாட்டிற்கு அச்சு எந்திரத்தை முதன்முதல் கொண்டு வந்து தமிழ்நூல்கள் அனைத்தும் அச்சு வடிவம் கொள்ளத் துணைபுரிந்த சீகன் பால்கு ஐயர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை.

    இதில் பல பெருமக்களுக்கெல்லாம் நன்றியுணர்வோடு, சிலைகள் நிறுவி மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நின்று நிலவச் செய்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.

    இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவி டர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன்.

    அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    சென்னை, பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் திமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறறது.

    இந்நிகழ்ச்சியில், சுமார் 2200 பேருக்கு புத்தாடை, அரிசி, மளிகைப் பொருட்கள், கிறிஸ்துமஸ் கேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பெரு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர் பாபு, தாயகம் கவி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நீங்கம் என்னை கிறிஸ்தவன் என்று அழைத்தால் நான் கிறிஸ்தவன். இந்து என்று அழைத்தால் நான் இந்து. முஸ்லீம் என்று அழைத்தால் நான் முஸ்லீம். எனக்கென்று எந்தவித ஜாதியோ, மதமோ கிடையாது. பிறப்பால் அனைவரும் சமம் என்று நான் சொல்லிக் கொண்டே இருப்பேன்" என்றார்.

    • நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது.
    • நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    செங்கல்பட்டு:

    பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது. இதைத்தொடர்ந்து விடுமுறை மற்றும் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட் டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று மாலை முதல் சென்னை-திருச்சி மார்க்கத்தில் கார் மற்றும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையடுத்து நேற்று மாலை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி மற்றும் இருகுன்ற பள்ளி அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இன்று காலையும் வழக்கத்தை விட வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு தாலுக்கா மற்றும் பட்டாளம் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரிசெய்தனர். கடும் நெரிசல் காரணமாக பாலாற்று பாலத்தில் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து செல்கின்றன.

    • பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது.
    • அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.

    ஆலந்தூர்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை என்பதாலும், பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடப்பட்டு உள்ளதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.

    தென் மாவட்டங்கள் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்வதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விடஅதிகமாக உள்ளது. மக்கள் விமான பயணங்களை அதிக அளவில் தேர்வு செய்வதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

    சென்னை- திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ.2,864. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.14,065 முதல் ரூ.17,910 வரை அதிகரித்து உள்ளது.

    இதேபோல் சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.3,018. ஆனால் இப்போது ரூ.15,661 முதல் ரூ.16,124 வரை கட்டணம் உள்ளது.

    சென்னை-கோழிக்கோடு கட்டணம் ரூ.12,590 முதல் ரூ.15,552 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,734) சென்னை-கண்ணூர்- ரூ.11,696 முதல் ரூ.15,858 வரையும் (வழக்கமான கட்டணம் ரூ.3,519) உயர்ந்து இருக்கிறது.

    சென்னை-தூத்துக்குடிக்கு ரூ.10,894 முதல் ரூ.14,234 வரையும், கோவை- ரூ.10,769 முதல் ரூ.14,769, திருச்சி-ரூ.5,631 முதல் ரூ.9,555 வரையும், மதுரை-ரூ.10,192 முதல் ரூ.17,950 வரையும் உள்ளது. கட்டணம் பல மடங்கு உயர்ந்தாலும், தென் மாவட்டம் மற்றும் கேரள மாநில மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் அனைத்து விமானங்களிலும் முன்பதிவு பெரும்பாலும் முடிந்து விட்டது.

    • துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை இரவு முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாள் வரை 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் 8000 போலீசார் விரிவான பாதுகாப்பு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    காவலர்கள் சாதாரண உடையில் கண்காணித்து திருட்டு, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது.
    • ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது.

    அருவங்காடு:

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுநாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகள் முன்பு ஸ்டார்களை தொங்க விடுவது, குடில்களும் வைத்துள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் தான். கிறிஸ்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் தங்களது நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக் வாங்கி கொடுப்பது வழக்கம்.

    இதனை அடுத்து அனைத்து பேக்கரிகளிலும் கேக் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.

    அங்குள்ள தேவாலயங்கள் அனைத்தும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. அங்கு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீடுகள் மற்றும் கடைகளிலும் ஸ்டார்கள் தொங்கவிட்டு, குடில்களும் அமைத்துள்ளனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ள பேக்கரிகளில் கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிறிஸ்துமசுக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் கேக் விற்பனை சூடுபிடித்து உள்ளது. இந்த கேக்குகளிலும் மக்களை கவரும் வகையில், பல்வேறு வகையில் கேக்குகளை தயாரித்து வருகின்றன.

    அந்த வகையில், சதுரம், வட்டம் மட்டுமின்றி கிறிஸ்துமஸ் தாத்தா, மயில், ரோஜா மலர் மற்றும் பல்வேறு வடிவங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையிலான குடிலை போன்றும் கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    இதனை கடைக்கு வரும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து தங்களுக்கு பிடித்தமான கேக்குகளை வாங்கி செல்கிறார்கள். ஒரு கிலோ கேக் ரூ.1800க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு 1 கிலோ கேக் ரூ.600க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் ஹோம்மேட் சாக்லேட் தயாரிப்பு பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு சுற்றுலா வந்துள்ள மக்களும் தங்களுக்கு பிடித்தமான கேக் வகைகள் மற்றும் ஹோம்மேட் சாக்லேட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

    இதனால் நீலகிரியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது.
    • பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

    சென்னை:

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

    பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.

    சென்னையில் இருந்து திருச்சி, கோவை, நாகை, நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆம்னி பேருந்துகளில் விழாக்கால கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்ல அதிகபட்ச கட்டணம் - ரூ.3700 என்றும் தற்போது ரூ.4100 வரை வசூலிக்கப்படுகிறது.

    பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு திருவள்ளூர், ஓசூர், சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா, கர்னூல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது. இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது. பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    நாளை வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மல்லி ஒரு கிலோ ரூ.1800-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், முல்லை-ரூ.900, சாக்லேட் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ்-ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.60 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து பூவியாபாரிகள் கூறும்போது, நாளை வைகுண்ட ஏகாதசி, வருகிற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    • கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.
    • கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கடந்த வாரம் பெய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகிறார்கள். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    ஒரு சில பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடிந்து உள்ளது. சில இடங்களில் வெள்ளம் மக்களை கடுமையாக பாதித்து உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் இயல்பு நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றனர்.

    தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தூத்துக்குடி, பாளையங்கோட்டை, சமாதானபுரம், உடன்குடி, மெய்ஞானபுரம், நாசரேத், சாத்தான்குளம், உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் எப்போதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெறும். கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. திருச்சபைகளை சேர்ந்த ஆலயங்கள் இந்த நாட்களில் பரபரப்பாக காணப்படும்.

    கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் வீடு வீடாக செல்லுதல், ஆலய அலங்கரிப்பு போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும்.

    ஆனால் தற்போது வெள்ளம் பாதித்து மக்கள் கஷ்டப்படுகிற நிலையில் கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள். எளிமையான முறையில் ஆராதனை நடத்தவும், பட்டாசு, வாணவேடிக்கை போன்றவற்றை தவிர்க்கவும் முடிவு செய்துள்ளனர்.

    மாறாக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். மளிகை பொருட்கள், உணவு, குடிநீர், பிஸ்கட், போர்வை போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.

    வீடுகளை இழந்து நிற்கதியாக இருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்க பண்டிகை ஆடம்பரத்தை கிறிஸ்தவர்கள் தவிர்த்துள்ளனர். தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    மேலும் தென் மாவட்டங்களை சேர்ந்த சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வதையும் தவிர்த்து விட்டனர். வழக்கமாக குடும்பம் குடும்பமாக சென்று சொந்த ஊர்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

    இந்த முறை பஸ், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தற்போதுதான் சீராகி உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து சீரடையாத நிலை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    • பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில், முக்கியமான பண்டிகைகள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையானது சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களோடு இணைந்து வருகிறது.

    எனவே, பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதை தவிர்த்து, அனைவரும் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இது குறித்து, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும் மற்றும் இதர ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 100 பஸ்களுடன் கூடுதலாக வருகிற 22-ந்தேதி 350 பஸ்களும் 23-ந்தேதி 290 பஸ்களும் என மொத்தம் 640 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாண்டா கிளாஸ் ஆடை, கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படும்.
    • எங்களது அனுமதி இல்லாமல் குழந்தைகளை ஈடுபடுத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் மரங்கள் வைப்பது, சாண்டா ஆடை அணிந்து பரிசுகள் வழங்குவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். இதுபோன்ற ஏற்பாடுகள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் செய்யப்படும்.

    ஒரு சில பள்ளிகளில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுபோன்று செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் பெற்றோர்களில் சம்மதத்தை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாஜபூர் மாவட் கல்வித்துறை அதிகாரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அந்த சுற்றறிக்கையில் "மாணவ- மாணவர்களின் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் இல்லாமல் அவர்களை சாண்டா கிளாஸ் ஆடை அணிய வைப்பது, கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்ற கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக்கூடாது. இது தொடர்பாக புகார் ஏதும் வந்தால், பள்ளிக்கூடத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேறகொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கல்வி அதிகாரி இதுகுறித்து கூறுகையில் "தொடர்ந்து வரும் திருவிழா சீசனில் பள்ளிகள் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்த சுற்றறிக்கை தடை செய்தாது. தங்களுடைய சம்மதம் இல்லாமல் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பெற்றோர்கள் கடந்த காலத்தில் புகார் அளித்துள்ளனர். சுற்றறிக்கை எண்ணம் இதுபோன்ற சர்ச்சையை தடுப்பதற்காகத்தான். சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதை விட இது சிறந்தது" என்றார்.

    • கவர்னர் மாளிகையில் நாளை கிறிஸ்துமஸ் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
    • தென்மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை ரத்து செய்ய முடிவு.

    சென்னை:

    கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில்,

    கனமழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிலவும் தீவிர சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×