search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை வைகுண்ட ஏகாதசி: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு
    X

    நாளை வைகுண்ட ஏகாதசி: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

    • இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது.
    • அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு திருவள்ளூர், ஓசூர், சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பா, கர்னூல் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் தினசரி விற்பனைக்கு வருகிறது. இன்று 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பூ விற்பனைக்கு குவிந்துள்ளது. பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது.

    நாளை வைகுண்ட ஏகாதசி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.

    மல்லி ஒரு கிலோ ரூ.1800-க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், முல்லை-ரூ.900, சாக்லேட் ரோஸ் ரூ.150, பன்னீர் ரோஸ்-ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சாமந்திப்பூ ரூ.60 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

    இதுகுறித்து பூவியாபாரிகள் கூறும்போது, நாளை வைகுண்ட ஏகாதசி, வருகிற திங்கட்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே பூக்கள் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    Next Story
    ×