search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாணவர்களை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த... பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய கல்வி நிர்வாகம்
    X

    மாணவர்களை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்த... பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிய கல்வி நிர்வாகம்

    • கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சாண்டா கிளாஸ் ஆடை, கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்படும்.
    • எங்களது அனுமதி இல்லாமல் குழந்தைகளை ஈடுபடுத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்ததால் இந்த நடவடிக்கை

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் மரங்கள் வைப்பது, சாண்டா ஆடை அணிந்து பரிசுகள் வழங்குவது போன்ற ஏற்பாடுகள் செய்யப்படும். இதுபோன்ற ஏற்பாடுகள் வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் போன்ற இடங்களில் செய்யப்படும்.

    ஒரு சில பள்ளிகளில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் மாணவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுபோன்று செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் பெற்றோர்களில் சம்மதத்தை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய பிரதேச மாநிலத்தின் ஷாஜபூர் மாவட் கல்வித்துறை அதிகாரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அந்த சுற்றறிக்கையில் "மாணவ- மாணவர்களின் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் இல்லாமல் அவர்களை சாண்டா கிளாஸ் ஆடை அணிய வைப்பது, கிறிஸ்துமஸ் மரம் வைப்பது போன்ற கிறிஸ்துமஸ் தொடர்பான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தக்கூடாது. இது தொடர்பாக புகார் ஏதும் வந்தால், பள்ளிக்கூடத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேறகொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட கல்வி அதிகாரி இதுகுறித்து கூறுகையில் "தொடர்ந்து வரும் திருவிழா சீசனில் பள்ளிகள் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்த சுற்றறிக்கை தடை செய்தாது. தங்களுடைய சம்மதம் இல்லாமல் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பெற்றோர்கள் கடந்த காலத்தில் புகார் அளித்துள்ளனர். சுற்றறிக்கை எண்ணம் இதுபோன்ற சர்ச்சையை தடுப்பதற்காகத்தான். சம்பவம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதை விட இது சிறந்தது" என்றார்.

    Next Story
    ×