search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"

    • தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெற முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன், வர்த்தக பிரமுகர் கருணாநிதி, சதுரங்க கழக மாநில இணைச்செயலாளர் பாலகுணசேகரன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் சாந்தகுமார் கருணாகரன், நேசக்கரம் தன்னார்வலர் குழு நிர்வாகிகள் எழிலரசன், பெலிக்ஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் அளித்த மனுவில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செயல்படும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொது மருத்துவர் (எம். டி) பணியிடம் காலியாக உள்ளது.

    இதற்காக நீடாமங்கலத்தில் இருந்து மாற்றுப் பணியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பொது மருத்துவர் ஒருவர் மன்னார்குடிக்கு வந்து செல்கிறார்.

    வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்கள், நடைமுறை சிக்கல் காரணமாக அந்த 3 நாட்களிலும் பல நேரங்களில் பொது மருத்துவர் இல்லாத நிலையே நீடிக்கிறது.

    இதனால், மாரடைப்பு ஏற்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையை நாடிவரும் நோயாளிகளுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்து, அடுத்த கட்டமாக உரிய மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறைந்தபட்சம் இசிஜி எடுத்து, அது தொடர்பான வழிகாட்டல் செய்வதற்கூட முடியாத நிலை உள்ளது.

    இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்ட தொடர் சிகிச்சை பெறுவது குறித்து ஆலோசனை பெறவும் முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலும், இம்ம மருத்துவமனையில் மாதத்துக்கு சராசரியாக 300 மகப்பேறு மற்றும் பொது அறுவை சிகிச்சை, மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

    அதுபோல் , மருத்துவமனைக்கு அன்றாடம் 1000 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 350 உள்நோயாளிகள் அன்றாடம் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் பொது மருத்துவர் இல்லாமல், குறித்த நேரத்துக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    எனவே, நோயாளிகளின் நலன் கருதி, நிரந்தரமாக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பொது மருத்துவர் ஒருவரை விரைவாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
    • போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவர், பணியாளர் வருகைப் பதிவேடு , பிரசவ வார்டு, பல் மருத்துவ பகுதி, பெண்கள் குழந்தைகள் பிரிவு, பதிவு சீட்டு வழங்கும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, மக்களை தேடி மருத்துவ பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    மேலும் போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா ? எனவும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள் ராஜசேகர், நிர்மல் குமார் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
    • மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்கினார். தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சுமார்ரூ. 7 கோடியே 30 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் சென்டரை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மருத்துவமனையில் ரூ. 45 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி, எம்.பி, ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் , மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழக அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளதாகவும், இதற்கு ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் இதற்காக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை பார்த்து வந்துள்ளதாகவும் விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைக்கும் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
    • நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

    மேலும் டேட்டா புளோ, எச்.ஆர்.டி சான்றிதழ்களில் சான்றோப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேற்படி பணியா ளர்களுக்கு உணவு படி ,இருப்பிடம், விமான பயண சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை வேலை அளிப்ப வரால் வழங்கப்படும்.

    பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்க ளை அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலை பேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ( 9566239685, 6379179200, 044- 22505886/ 22502267 ) .

    மேற்குறிப்பிட்ட பணிகளு க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தஞ்சாவூரில் நாளை ( புதன்கிழமை ) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமுக்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொருத்து முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35400 மட்டும் வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04362-237037-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.
    • இந்த ஆஸ்பத்திரிக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை மகப்பேறு சேவையில் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் 40 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 20 முதல் 25 மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்க்கப்பட்டு, கா்ப்பி ணிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனா். தமிழ்நாடு அளவில் இந்த மருத்துவமனை பிரசவம் மற்றும் சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.

    இந்நிலையில், லக்சயா என்கிற திட்டத்தின் மூலம் இந்த மருத்துவமனைக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்க ப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது .

    மேற்கண்ட தகவலை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

    • 4 குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று உயர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    • தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன் சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட தொடக்க நிலை இடையிட்டு சேவைகள் மையம், சென்னை குளோபல் ஆஸ்பத்திரி சார்பில் தலசீமியா தொடர் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் தலைமை வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    இந்த முகாமில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 4 குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று உயர் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் சென்னை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பொன்னி சிவப்பிரகாசம், ஹரிஷ்குமார் மற்றும் குழந்தைகள் நலத்துறை தலைவர் செல்வ குமார், நிலைய மருத்துவ அலுவலர் சுப்புராமன், மருத்துவ கல்லூரி மருத்து வமனை நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா?
    • சிகிச்சை குறித்து அங்கு பணியில் இருந்த டாக்டரிகளிடம் கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    மேலும் இங்கு கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான தங்கும் இடவசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா ? என மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அங்கு பணியில் இருந்த டாக்டரிகளிடம் கேட்டறிந்தார்.

    • கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.
    • நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை திருவைக்காவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாண்டியன் (வயது 36).டிராக்டர் ஓட்டுனர்.

    இவர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் நரிமேனி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். தடுப்பனை கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தார்.

    டிராக்டரில் ஏற்றப்பட்ட இரும்பு கம்பியின் மேல் மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த ஹோகன் மொண்டல் (வயது 33), அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடிமொய் கோஸ் (வயது 26),கோபிண்டா மொண்டல் (வயது 32),தீபன் மொண்டல் (வயது 38), கணேஷ் மொண்டல் (வயது 38) ஆகிய 5 பேர் சென்று கொண்டிருந்தனர். திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரர் சுடுகாடு அருகில் டிராக்டர் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் கவிழ்ந்தது.இதில் டிராக்டரில் சென்றவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    இதில் ஹோகன் மொண்டல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
    • கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.

    குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
    • நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    மும்பை :

    மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

    • இந்து மகாசபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது

    நாகர்கோவில் :

    அகில பாரத இந்து மகாசபா மாநிலத்தலைவர் த.பாலசுப்பிரமணியன் தலைமையில் மாநகர தலைவர் ராஜேஷ் மாநில செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜன், ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் நேற்று நாகர்கோவியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நாகாகோவில் ஆசாரிபள்ளம் பழமையான காசநோய் மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு இடம் கையகப்படுத்தும்போது அந்த இடத்தில் இருந்த இந்து ஆலயங்களையும் அரசே தினமும் பூஜையோடு பராமரித்து வருகிறது. இந்த இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இது இந்து ஆலயங்களுக்கு சொந்தமான இடமானதால் அரசே இந்த ஆலயத்தை பராமரித்து வருகிறது. சமீபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக மாறிய பிறகும் ஆலய பூஜைகள் தினசரி நடைபெற்று வருகிறது.

    எனவே அங்கு புதிதாக எந்தவிதமான கிறிஸ்தவ ஜெபக் கூடமோ, பிற வழிபாட்டுத்தலங்களோ அமைக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். மருத்துவமனையில் ஏற்கனவே என்ன நடைபெற்று வருகிறதோ, அது தொடர வேண்டும். வேறு எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×