என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்து கிடக்கும் டிராக்டர் மற்றும் பலியான தொழிலாளி.
டிராக்டர் வயலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளி சாவு
- கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது.
- நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலை திருவைக்காவூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பாண்டியன் (வயது 36).டிராக்டர் ஓட்டுனர்.
இவர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் நரிமேனி ஆற்றில் தடுப்பணை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். தடுப்பனை கட்டுமான பணிக்காக இரும்பு கம்பிகளை டிராக்டரில் ஏற்றி கொண்டு நேற்று சென்று கொண்டிருந்தார்.
டிராக்டரில் ஏற்றப்பட்ட இரும்பு கம்பியின் மேல் மேற்கு வங்காளம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த ஹோகன் மொண்டல் (வயது 33), அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடிமொய் கோஸ் (வயது 26),கோபிண்டா மொண்டல் (வயது 32),தீபன் மொண்டல் (வயது 38), கணேஷ் மொண்டல் (வயது 38) ஆகிய 5 பேர் சென்று கொண்டிருந்தனர். திருக்கண்ணபுரம் ராமநந்தீஸ்வரர் சுடுகாடு அருகில் டிராக்டர் ஆற்றங்கரையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் கவிழ்ந்தது.இதில் டிராக்டரில் சென்றவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதில் ஹோகன் மொண்டல் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






