search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கழிவு"

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டியுள்ளனர்.
    • ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது.

    இப்பகுதியில் கிராமங்களுக்கான நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் இப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    மேலும் இந்த ஏரியை சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளதால் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கபட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஏரியில் மர்ம கும்பல் ஒன்று வாகனங்களில் அதிக அளவிலான மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டி யுள்ளனர்.

    இதனால் ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து தற்பொழுது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மருத்துவ கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலப்பதால் தண்ணீர் நஞ்சாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலையரசன் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மரவனூரைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 28). இவர் மரவனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு ஊழியராக தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரை மணப்பாறை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணிக்கு வரச் சொல்லி உள்ளனர். அதன்படி பணிக்கு வந்த கலையரசன் மருத்துவ கழிவுகள் மற்றும் காலாவதியான மருந்து மாத்திரைகளை எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரின் சட்டையில் திடீரென தீப்பிடித்து எரியவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அவர் எரியும் நெருப்புடன் சட்டையை கழற்றி வீசியபடி மருத்துவமனை வளாகத்தில் ஓடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தீக்காயம் அதிக அளவில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கலையரசன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மை நிலையில் வாழும் குடும்பம் என்ற நிலையில் கலையரசன் இந்த துயர சம்பவத்தில் இறந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    • மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.
    • கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினம் தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் மகப்பேறுக்கு மட்டும் தனி கட்டிடம் ஒதுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடத்திற்கு பின்புறம், மருத்துவனை முழுவதும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் மூட்டை, மூட்டையாக மருத்துவ கழிவுகள் அங்கு குவிந்து காணப்படுகிறது.

    குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் கழிவுகள், மற்றும் அவசர சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருத்துவ பாதுகாப்பு கவச கழிவுகள் உள்ளிட்டவற்றை பணியாளர்கள் ஆங்காங்கே கொட்டுவதால் மருத்துவமனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
    • இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    கேரளாவிலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவது குறித்து திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்த கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- கேரளத்திலிருந்து மருத்துவ மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வந்து தமிழகத்தில் எல்லையோர கிராமங்களில் கொட்டப்படுகிறது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கேரளாவுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் செக்போஸ்ட் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இது போன்ற கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள், அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லையோர கிராமங்களில் பயன்படாமல் உள்ள வேளாண் நிலங்களில் இது போல் சட்ட விரோதமாக கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

    நில உரிமையாளர்கள் இதற்கு துணை போகக் கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் கேரளாவிலிருந்து மருத்துவ, இறைச்சி மற்றும் திடக்கழிவுகள் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் பின் வரும் எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் கலெக்டர் - 0421 297 1100, எஸ்.பி., - 0421 297 0017, மாசு கட்டுப்பாட்டு வாரியம் - 0421 - 223 6210 மற்றும் 04255 - 252225, பறக்கும் படை - 0421-224 1131.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படு த்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-

    மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

    மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    ×