search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரியில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ, குப்பை கழிவுகளை படத்தில் காணலாம்.

    ஏரியில் மருத்துவ கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டியுள்ளனர்.
    • ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள கெட்டுப்பட்டி பகுதியில் ஏரி ஒன்று அமைந்துள்ளது.

    இப்பகுதியில் கிராமங்களுக்கான நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களும் அதிக அளவில் இப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    மேலும் இந்த ஏரியை சுற்றிலும் விவசாய நிலங்கள் அமைந்துள்ளதால் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளும் அமைக்கபட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஏரியில் மர்ம கும்பல் ஒன்று வாகனங்களில் அதிக அளவிலான மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை டன் கணக்கில் கொண்டு வந்து நள்ளிரவு நேரத்தில் ஏரி பகுதியில் கொட்டி யுள்ளனர்.

    இதனால் ஏரி பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து தற்பொழுது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் மருத்துவ கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலப்பதால் தண்ணீர் நஞ்சாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×