என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.
பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் 'திடீர்' ஆய்வு
- மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
- போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவர், பணியாளர் வருகைப் பதிவேடு , பிரசவ வார்டு, பல் மருத்துவ பகுதி, பெண்கள் குழந்தைகள் பிரிவு, பதிவு சீட்டு வழங்கும் இடம், அவசர சிகிச்சை பிரிவு, மக்களை தேடி மருத்துவ பிரிவு, மருந்தகம், ஆய்வகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும் போதிய அளவில் மருந்து இருப்பு உள்ளதா ? எனவும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள் ராஜசேகர், நிர்மல் குமார் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story






