search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சவுதி அரேபியா நாட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    சவுதி அரேபியா நாட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
    • நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட பணி அனுபவத்துடன் 35 வயதுக்கு உட்பட்ட பி.எஸ்.சி நர்சிங் தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

    மேலும் டேட்டா புளோ, எச்.ஆர்.டி சான்றிதழ்களில் சான்றோப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேற்படி பணியா ளர்களுக்கு உணவு படி ,இருப்பிடம், விமான பயண சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை வேலை அளிப்ப வரால் வழங்கப்படும்.

    பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்க ளை அயல் நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன தொலை பேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். ( 9566239685, 6379179200, 044- 22505886/ 22502267 ) .

    மேற்குறிப்பிட்ட பணிகளு க்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தஞ்சாவூரில் நாளை ( புதன்கிழமை ) காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் இந்த முகாமுக்கு வர முடியாதவர்கள் தங்களுடைய சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.

    அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியை பொருத்து முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடம் இருந்து சேவை கட்டணமாக ரூ.35400 மட்டும் வசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் 04362-237037-ஐ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×