search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.
    • பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தில் உள்ள அயன் பாப்பாக்குடியில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவில் கழிவு நீர் வெளியேறி வருகிறது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கழிவுநீர் மழை நீரோடு கலந்து அயன் பாப்பாக்குடி கண்மாயில் பாசன கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

    அத்துடன் பல்வேறு பகுதியிலிருந்து திறந்து விடப்படும் கழிவுநீரும் கண்மாயில் கலப்பதால் அயன்பாப்பாக்குடி கண்மாயிலிருந்து வெள்ளக்கல் வழியாக மறுகால் பாயும் இடத்தில் நீரின் வேகம் அதிகமாக செல்வதாலும், மறுகால் பாயும் பாலத்தின் அருகில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து இருப்பதாலும் நீரின் வேகத்தை அந்த ஆகாயத்தாமரைகள் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால் வெள்ளக்கல் பகுதியில் மறுகால் பாயும் இடத்தில் பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை பொங்கி வருகிறது.

    இந்த நுரையானது அங்கு மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓடிகள் பெரிதும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று வெள்ளைக்கல் நுரை மலைபோல் எழுந்து விமான நிலையம் செல்லும் சாலை முழுவதும் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

    அந்த தினமும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் கழிவு நீரால் உருவான நுரையால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 5 நாட்களாக இந்த சிரமத்தை சந்தித்து வரும் அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இனிமேலும் தாமதிக்காமல் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வெள்ளை கல்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ‘பேட்ச் ஒர்க்’ பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
    • முக்கிய சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் கடந்த சில வருடங்களாக புதிய சாலை பணிகள் முழுமையாக நடைபெற வில்லை. இதனால் பெரும் பாலான சாலைகள் குண் டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒப்பந்ததா ரர்களின் தரமற்ற பணி களால் தற்போது போடப் படும் சாலைகளின் ஆயுட் காலம் என்பது சில மாதங்கள் மட்டுமே.

    இதனால் புதிய சாலை கள் கூட ஒரு சில நாட்களில் படுமோசமாக மாறி விடுகிறது. இதனை அதிகா ரிகளும், மக்கள் பிரதி நிதிகளும் கண்டுகொள்வ தில்லை.

    மதுரை நகரில் பெரியார் பஸ் நிலைய பகுதி, திருப்ப ரங்குன்றம் சாலை, பழங்கா நத்தம், ஜெய்ஹிந்துபுரம், அவனியாபுரம், அரசரடி, செல்லூர், கண்மாய்கரை ரோடு, காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு, மாசி வீதிகள், மாரட் வீதிகள், பழைய குயவர் பாளையம் ரோடு, ஆணையூர், கூடல் நகர், குலமங்கலம் ரோடு, ஆலங்குளம், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, மீனாட்சி நகர், தபால்தந்தி நகர் உள்ளிட்ட 90 சதவீத சாலை கள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

    சாலைகளில் ஏற்பட் டுள்ள பள்ளங்க ளால் மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் செல் பவர்கள் அடிக்கடி விபத் தில் சிக்குகின்றனர். மழை காலங்களில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.

    மதுரை நகரில் சாலைகள் பராமரிப்பு குறித்து பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மதுரை நகரில் முக்கிய சாலைகளில் பேட்ச் ஒர்க் (ஒட்டு வேலை) தீவிரமாக நடக்கிறது. சாலைகளை முழுமையாக தோண்டி புதிய சாலைகளை போடாமல் பள்ளம் ஏற்பட் டுள்ள பகுதிகளில் மட்டும் தார் கலவைகளை போட்டு சமப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனால் பயனில்லாமல் உள்ளது.

    கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பேட்ச் ஒர்க் செய்யப்பட்ட சாலைகள் மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளது. சாலைகள் ஒட்டுபோட்ட இடத்தில் தரமான கலவைகள் பயன்படுத்தாததால் சிறிய மழைக்கே அவைகள் பெயர்ந்து கரைந்தோடி விட்டது. இதனால் அரசின் நிதி வீணாக்கியதை தவிர எந்த பலனும் இல்லை. தரமற்ற சாலைகளால் மதுரை நகர வாசிகளுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பது தெரிய வில்லை.

    அண்மையில் வெளி யான ஒரு படத்தில் நடிகர் யோகிபாபு புதிதாக கட்டப் பட்ட கட்டிடத்தில் பேட்ச் ஒர்க் பணிக்கு செல்வார். அதில் கட்டிடங்கள் பெயர்ந்து வரும். மதுரை நகர சாலைகளில் மேற் கொள்ளப்பட்ட பேட்ச் ஒர்க் பணி அந்த காட்சியை நினைவூட்டுவதாக உள்ளது.

    • பழூர் அருகே கன மழையால் சாலையில் குளம்போல் தண்ணீர தேங்கி நின்றது
    • தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் கடும் அவதி

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. விடிய விடி மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தா.பழூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் சாலையில் குளம் போல் மழைநீர்தேங்கியது.

    தேங்கிய மழைநீர் இருபுறமும் வடிகால் வசதி அமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. சாலையில் முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர்.

    சாலைகள் சேரும் சகதி அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டுள்ளனர். சாலையை சரி செய்ய ஏற்கனவே அதிகாரியிடம் மனு பல முறை அளித்திருந்த நிலையில், தற்போது வரை சாலை அமைக்கப்படாததால் இரவு பெய்த மழையின் காரணமாக சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    உடனடியாக தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்றி, சாலை அமைத்து நோய் தொற்று பரவாமல் பாதுகாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது
    • பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு நோயாளிகள் வார்டுகள் உள்ளது. நேற்று நள்ளிரவு பெண் நோயாளி கள் தங்கி இருந்த வார்டு ஒன்றில், கழிவறை குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அந்த நீர் சிகிச்சை பெறுவோர் வார்டில் புகுந்ததது. இதனால் அவதியடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் வார்டில் புகுந்த கழிவுநீரை சுத்தம் செய்தனர். முழு மையாக வெளியேற்றாத கழிவுநீர் துர்நாற்றத்தில் நோயாளிகள் இரவு முழுவதும் அவதி யடைந்தனர். விடிந்தபிறகு, ஆஸ்பத்திரி துப்புரவு ஊழியர்கள் வந்து முழுமையாக சுத்தம் செய்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறும் போது, நோயாளிகள் போட்ட குப்பைகள், கழிவு நீர் செல்லும் குழாயில் அடைத்து கொண்டதால், நீர் வார்டில் புகுந்துவிட்டது. அதிகாலை என்பதால், ஊழியர்கள் இல்லை. பிறகு ஊழியர்கள் வரவழைத்து அதை சரிசெய்துவிட்டோம் என்றனர்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது.
    • 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை

    திருப்பூர்

    தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது. விவசாயிகளுக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் காசோலை வழங்கப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு தாமதமாக காசோலை வழங்கப்படுகிறது.

    தற்போது கடந்த மே 29-ந் தேதி கொப்பரை வழங்கிய 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக காசோலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் நடக்கிறது
    • அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டு வெளி யேறும் தண்ணீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வரும் நிலையில் நகராட்சி சார்பில் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி நீருற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது.

    இந்தநிலையில், காவேரி கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் நாள் தோறும் வழங்கப்படும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது 80 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை மட்டும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் ராமேசு வரத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு எற்பட் டுள்ளது.

    மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைந்துள் ளனர்.

    சேதமடைந்துள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கனவம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் ராமேசுவரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.
    • பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்குள் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் பஸ்கள் வந்து செல்லும்போது பொதுமக்கள் அவதிபடுவதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஓட்டுநர்கள் கூறியதாவது:- பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் அதிக அளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமை பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள், திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மீன்சுருட்டியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதி மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
    • நிதி ஒதுக்கியும் புதிய கட்டிடம் கட்ட தாமதம் ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

    அரியலூர், 

    மீன்சுருட்டியில் 2 அரசு விடுதிகள் பழுதடைந்த தால் தனியார் விடுதிக்கு மாண வர்கள் மாற்றப்ப ட்டுள்ள னர்.

    அரியலூர் மீன்சுருட்டி யில் ஆதி திராவிடர் நல ஆண்கள் மாணவர்கள் விடுதி 1996 முதல் இயங்கி வருகிறது. இந்த விடுதியில் சுமார் 60 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படி ப்பை மேற்கொண்டு வருகி ன்றனர்.இந்நிலையில் விடுதி கட்டிடம் மிகவும் பழமை யாகி, பழுதடைந்த நிலைக்கு சென்றதால், விடுதியில் தங்கி இருந்த மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த 2020 டிசம்பர் மாதம் மீன் சுருட்டியில் உள்ள தனியார் கட்டிடத்தில் தங்க வைக்கப்ப ட்டு உள்ளனர்.

    மாணவர் விடுதிக்காக இந்த தனியார் கட்டிடத்திற்கு மாதம், மாதம் ரூ.9 ஆயிரம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தனியார் கட்டிடத்தில் 30 மாணவர்கள் மட்டுமே தங்கக்கூடிய அள விற்கு இட வசதி உள்ளது.ஆனால் 60 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ள தா ல், பள்ளி மாணவ ர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே, இங்கே தங்கி உள்ளனர். இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு அடிக்கடி செல்லும் நிலை ஏற்படுகிறது. புதிய தங்கும் விடுதி கட்டுவதற்கு மாநில அரசு ரூ.3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிக ளின் மெத்தன போக்கால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    இதே போல மீன்சுரு ட்டில்யில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிற்படுத்தப்ப ட்டோர் நலத் துறை சார்பில் மாணவர் விடுதி பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த விடுதியில் சுமார் 50 மாணவர்கள் தங்கி இருந்து பள்ளி படிப்பை தொடர்ந்து வந்தனர். பழைய கட்டிடம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி கடந்த 2023 மார்ச் மாதம் பஞ்சாயத்து கட்டிடத்திற்கு விடுதி மாற்றப்பட்டது.

    இரண்டு விடுதிகளிலும் உள்ள மாணவர்கள் அடிப்ப டை வசதிகள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொள்கி ன்றனர், சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, மாணவர்களின் நலன் கருதி இரண்டு புதிய விடுதிகள் கட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.

    போதிய வசதி இல்லாத காரணத்தால் ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் குளியலறை மற்றும் கழி வறை செல்வதற்கு மாணவ ர்கள் நீண்ட நேரம் காத்திரு க்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு தாமத மாக செல்லுதல் உள்ளிட்ட தேவையற்ற சிரமங்கள் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், இரவு நேரங்களில் மாணவர்க ளுக்கு நிம்மதியான தூக்க மும் கிடைப்பதில்லை.

    மேலும் தனியார் கட்டிடத்திற்கான வாடகையை ஏப்ரல் மாதம் முதல் அரசு செலுத்தாததால் கட்டிட உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார். எனவே அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பழுதடைந்த விடுதிகளுக்கு பதிலாக புதிய விடுதிகள் கட்ட உடனே நடவடிக்கை மேற்கெர்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • அவனியாபுரத்தில் 92, 100-வது வார்டுகளில் தேங்கும் குப்பைகள்-குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட அவனியாபுரம் பகுதியில் உள்ள 92, 100 ஆகிய வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

    இந்த வார்டுகளில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதேபோல் மாநகராட்சி சார்பில் தினமும் மேற்கண்ட வார்டுகளில் குப்பைகள் நவீன பேட்டரி வாகன மூலம் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.

    ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததால் பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டன இதனால் குப்பைகள் அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே மலை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் தேங்கும் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும் பூந்தோட்ட நகர், செம்பூரணி ரோடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் அவனியாபுரத்தில் உள்ள மாநகராட்சி வரி வசூலிக்கும் மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த 100-வது வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி அய்யனார் உதவி பொறியாளர் செல்வ விநாயகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரச்சினைகள் உடனடியாக சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    • மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மின்கம்பம் சேதம்

    இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    20 மணி நேர மின்தடை

    இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

    இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    • சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.
    • இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது.

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கி கிடக்கும் சேறும், சகதியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×