கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் திறந்து கிடக்கும் சாக்கடைக்குழியால் மக்கள் அவதி

அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் நடக்கிறது அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் திறந்து கிடக்கும் சாக்கடைக்குழியால் மக்கள் அவதி
Published on

கோத்தகிரி,

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com