search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiiris"

    • கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
    • கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள பர்லியார் ஊராட்சி சார்பில் கோடமலை ஒசட்டி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சுசீலா தலைமைதாங்கினார்.

    துணைத்தலைவர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிஅளிக்கப்பட்டது.

    மேலும் கூட்டத்தில் பங்கேற்ற தோட்டக்கலை துறை அதிகாரிகள் மங்குஸ்தான் உள்ளிட்ட 5 வகை பழக்கன்றுகள், தேயிலை நாற்றுகள் ஆகியவை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.

    ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள தேயிலை தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்பிங்லர் கருவி மற்றும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

    • மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் நேரடியாக வந்திருந்து ஆய்வு
    • நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை

    ஊட்டி,

    ஊட்டி சட்டமன்ற தொகுதியில் எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எப்பநாடு ஊராட்சி தலைவர் கண்ணன் என்ற சிவக்குமார் செய்திருந்தார்.

    தொடர்ந்து மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் எப்பநாடு பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்தார்.

    அப்போது பூத் கமிட்டி, மகளிர்குழு மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை குழுக்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

    மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி, ஒன்றிய துணை செயலாளர் பீமன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரித்தனர்.
    • கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை ஊராட்சி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக குன்னூர் சிறப்பு தாசில்தார் சீனிவாசன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பராமரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சோலடா மட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு ரேஷன் கடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அங்குள்ள நூலக கட்டிடத்தில் இந்த கடையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. சோலடா மட்டத்தில் 290 குடும்ப அட்டைகள் உள்ளது.

    அனைவரும் அருகே உள்ள கோடமலை பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் இன எச்சரித்தனர்.

    தொடர்ந்து குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இந்த கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி மாதாந்திரக்கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சத்தியவாணி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் நேரு வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது பேரூ ராட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விவரம் வருமாறு:

    கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட கண்டிமட்டம் பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதற்காக அந்த பகுதியில் புதிய குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து, அம்மக்கல் தடுப்பணையில் இருந்து கண்டிமட்டம் வரை குடிநீர் குழாய்கள் பதித்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    காந்திபுரம், பூதியாடா கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால், அங்கு புதிய குழாய்கள் அமைக்கப்படும்.

    மட்டகண்டி பகுதியில் சட்டவிதிகளை மீறி கட்டிய கட்டிடத்திற்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். ஆனால் அங்கு தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் நடக்கிறது.

    மேலும் சட்டவிதிகளைமீறி மின் இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்தை, அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

    மஞ்சூர் சுற்றுவட்டார வியாபாரிகளின் கோரி க்கையை ஏற்று கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட சுமார் 30 கிராமங்கள் மற்றும் குந்தா, பிக்கட்டி, எடக்காடு, எமரால்டு, கிண்ணக்கொரை, அப்பர்ப வானி, பெங்கால்மட்டம், மஞ்சகம்பை, கெத்தை போன்ற சுற்றுலா பகுதிகளை காண கேரளாவில் இருந்துவரும் பயணிகளை, முள்ளி சோதனைச்சாவடியில் தடுக்காமல், அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கவுன்சிலர் மாடக்கன்னு நன்றி கூறினார்.

    • அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் நடக்கிறது
    • அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள சிறிய நடைபாதையை அங்கு உள்ள பொதுமக்கள், பள்ளிகுழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடைபாதையில் உள்ள சாக்கடைக்குழி திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் ஒருசிலர் குழிக்குள் விழுந்து படுகாயம் அடையும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே சாம்சந்த் பகுதியில் பெரியளவில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பாக நடைபாதை சாக்கடை குழியை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது
    • திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ஜெகநாதன், செயல்அலுவலர் மணிகண்டன் செய்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுஅக்ரகாரம் வேணுகோபாலசுவாமி கோவிவில் ஜெயந்தி விழா கோலாகலமாக நடை பெற்றது. அப்போது சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடத்தப்பட்டது. மாலையில் பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

    பின்னர் உறியடி உற்சவம்சிறப்பாக நடந்தது. இன்று ) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கார் ஜெகநாதன், ஆய்வர் ஹேமலதா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கிறிஸ்தவர்களுக்கு அன்பின் விருந்து உபசரிப்பு தரப்பட்டது
    • அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டி பேண்டு லைன் பகுதியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 11-வது ஆண்டு திருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதன்ஒருபகுதியாக அன்பின் விருந்து உபசரிப்பு நடந்தது.

    இதனை தி.மு.க நகர செயலாளர் ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து மாலை 7 மணிக்கு அன்னையின் திருத்தேர் அலங்காரம் மற்றும் தேர்பவனி நடத்தப்பட்டது.அன்னை வேளாங்கண்ணி மாதா திருத்தேர் பவனியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    • மருத்துவமனை புதுப்பொலிவுக்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது.

    கோத்தகிரி,

    தமிழகத்தில் உள்ள பழமைவாய்ந்த கட்டிடங்களில், கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரி குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு வெளிநோயாளிகள் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு வார்டு உள்பட பல்வேறு மருத்துவ வசதிகள் உள்ளன.

    கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு ரத்த வங்கி, பிணவறைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதே நேரத்தில் இங்கு உள்ள பழைய அவசர சிகிச்சை பிரிவில் போதிய கட்டிட வசதிகள் இல்லை. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, அங்கு புதுப்பொலிவுடன் அதிநவீன வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டுவது என்று தமிழக அரசு முடிவு செய்தது.

    இதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் எழுப்பும் பணி இரவு பகலாக மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. அங்கு தற்போது 2 தளங்களில் வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் புதிய அவசர சிகிச்சைப்பிரிவு, இன்னும் ஓரிரு மாதங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டம் நடந்தது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவி ராஜா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், திராவிடமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் இளஞ்செழியன் பாபு, சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பேரூர் செயலாளர்கள் உதயகுமார், சுப்ரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, வள்ளி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் நன்றி கூறினார்.

    ×