கூடலூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. கூட்டம் நடந்தது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூடலூர் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார் அனைவரையும் வரவேற்றார்.கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் பல்லவி ராஜா கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, காசிலிங்கம், திராவிடமணி, ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், நகர செயலாளர்கள் இளஞ்செழியன் பாபு, சேகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பேரூர் செயலாளர்கள் உதயகுமார், சுப்ரமணி, நகராட்சி தலைவர்கள் பரிமளா, சிவகாமி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பேரூராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, வள்ளி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.முடிவில் தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com