search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டிச்சோலை கிராமசபை கூட்டத்தில் ரேஷன் கடை கோரி கிராம மக்கள் வலியுறுத்தல்
    X

    வண்டிச்சோலை கிராமசபை கூட்டத்தில் ரேஷன் கடை கோரி கிராம மக்கள் வலியுறுத்தல்

    • நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரித்தனர்.
    • கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை ஊராட்சி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தலைவர் மஞ்சுளா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக குன்னூர் சிறப்பு தாசில்தார் சீனிவாசன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் பராமரிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் ஏற்படும் வகையில் உள்ள பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து சோலடா மட்டம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊருக்கு ரேஷன் கடை அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அங்குள்ள நூலக கட்டிடத்தில் இந்த கடையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. சோலடா மட்டத்தில் 290 குடும்ப அட்டைகள் உள்ளது.

    அனைவரும் அருகே உள்ள கோடமலை பகுதியில் இருக்கும் ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் இன எச்சரித்தனர்.

    தொடர்ந்து குன்னூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது இந்த கிராம சபை கூட்டத்தில் 73 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×