ஊட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம்

மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் நேரடியாக வந்திருந்து ஆய்வு நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனை
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி கூட்டம்
Published on

ஊட்டி,

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை எப்பநாடு ஊராட்சி தலைவர் கண்ணன் என்ற சிவக்குமார் செய்திருந்தார்.

தொடர்ந்து மாவட்டசெயலாளர் கப்பச்சிவினோத் எப்பநாடு பகுதிக்கு நேரடியாக வந்திருந்து ஆய்வு செய்தார்.

அப்போது பூத் கமிட்டி, மகளிர்குழு மற்றும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை குழுக்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகளின் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அப்போது கிழக்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி, ஒன்றிய துணை செயலாளர் பீமன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com