சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது.
மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சேலம்-–அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.
மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சேலம்-–அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்.
Published on

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, சேலம் பிரதான சாலையில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. குட்டையாக நிற்கும் மழைநீரில் குப்பை, மண் சேர்ந்து சகதியாக மாறியதால், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்லும் போது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது சேறும் சகதியும் தெளித்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க போதிய வடிகால் வசதி ஏற்படுத்தவும், தேங்கி கிடக்கும் சேறும், சகதியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com