search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "copra"

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது.
    • 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை

    திருப்பூர்

    தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் உடுக்கம்பாளையம் பரமசிவம் உடுமலை கோட்டாட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடமிருந்து அரசு கொப்பரை கொள்முதல் செய்தது. விவசாயிகளுக்கு 15 முதல் 20 நாட்களுக்குள் காசோலை வழங்கப்பட வேண்டும். ஆனால் விவசாயிகளுக்கு தாமதமாக காசோலை வழங்கப்படுகிறது.

    தற்போது கடந்த மே 29-ந் தேதி கொப்பரை வழங்கிய 14 விவசாயிகளுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை காசோலை வழங்கப்படவில்லை. இதனால் அந்த விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக காசோலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • வியாபாரிகள் முன்னிலையில் கொப்பரை மூட்டைகள் தரம் பிரித்து ஏலமிடப்பட்டது.
    • மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது

    பொள்ளாச்சி,

    ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 493 கொப்பரை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. கடந்த வாரத்தை விட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதுகுறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 493 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தினர்.

    வியாபாரிகள் முன்னிலையில் அவை தரம் பிரித்து ஏலமிடப்பட்டது. முதல்தர கொப்பரை 205 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.7640-க்கும், அதிகபட்ச ரூ.8366-க்கும் விற்பனையானது.

    2-ம் தர கொப்பரை 288 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.4813-க்கும், அதிகபட்சம் ரூ.7292-க்கும் விற்பனையானது. 7 வியாபாரிகள், 66 விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

    கடந்த வாரத்தைவிட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்தும், குவிண்டாலுக்கு ரூ.511 விலை உயர்ந்தும் காணப்பட்டது. மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது" என்றார்.

    • ஏலத்துக்கு 142 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78க்கும், குறைந்தபட்சமாக ரூ.56க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 11 விவசாயிகள் 142 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 7, 135 கிலோ.

    இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78க்கும், குறைந்தபட்சமாக ரூ.56க்கும், சராசரியாக ரூ.76க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 5.29 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் முதல் தரம் ரூ.71 முதல் ரூ.81 வரையிலும், 2-ம் தரம் ரூ.56 முதல் ரூ.67 வரையிலும் விலை போனது. மொத்தம் 75 மூட்டைகள் ரூ.2 லட்சத்து 57ஆயிரத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
    • உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை :

    தமிழகம் முழுவதும் கொப்பரை சீசன் துவங்கியு ள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொப்பரை அனுப்ப ப்படுகின்றன.உடுமலை,பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசா யிகளிடம் கொப்பரை உற்பத்தி செய்ய உலர்களம் வசதி அதிகளவில் இல்லை. இதனால் 6 சதவீதம் ஈரப்பதத்துக்குள் இருக்கும் உலர் கொப்பரை (அரவை கொப்பரை) வாங்க காங்கேயம், வெள்ள கோவில், ஊத்துக்குளிக்கு விவசாயிகள் செல்கி ன்றனர். காங்கேயம் பகுதியில் கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்துக்கு தேங்காய் வரத்து இல்லை. தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.உலர் கொப்பரை இங்கு பற்றாக்குறையாக உள்ளதால் காங்கேயத்துக்கு செல்ல வேண்டியதுள்ளது.

    தற்போது மார்க்கெட்டில் உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை வி ற்பனை செய்யப்படுகிறது. அந்த விலைக்கு கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் கொள்முதல் மையங்களில் கிலோ 108.60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது உலர் கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளதால் இதே விலை நீடிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை திறந்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம்போனது.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.71 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நேற்று நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் பகுதியைச் சோ்ந்த 3 விவசாயிகள் 44 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 2, 123 கிலோ.இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.82க்கும் ஏலம்போனது.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.71 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது
    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது

    குடிமங்கலம் :

    ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் வாயிலாக, விவசாயிகளிடமிருந்து கொப்பரை கொள்முதல் செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இக்கொள்முதலுக்கான, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று இறுதிநாள் என அரசு அறிவித்துள்ளது.

    இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனுவில், 'ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கொள்முதலுக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தாமதம் ஏற்படுகிறது. இந்த உடுமலை ஒன்றியத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய முடியாமல் நிலுவையில் உள்ளது. எனவே, விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, விண்ணப்பங்களை பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 22 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 116 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 31 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 1,984 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 42 ஆயிரத்து 708 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 21 ரூபாய் 31 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 13 ஆயிரத்து 189 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 94 ஆயிரத்து 605 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் கொப்பரை தேங்காய்கள் 5 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 76 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 77 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 77 ரூபாய் 49 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தம் 98 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 7 ஆயிரத்து 590 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    • ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படுகிறது
    • இக்கொள் முதல் மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தற்போது ஈரோடு மாவட்டத்தில் 2022-ம் மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனைக்குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் அடுத்த மாதம் 31-ந் தேதி வரை செய்யப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட வுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்து கொப்பரை ரூ.110 மற்றும் அரவை கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த ப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார்அ ட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்திய மங்க லம், அவல்பூ ந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்க ப்படுகிறது.

    இக்கொள் முதல் திட்டத்தில் ஈரோடு மாவட்ட த்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×