காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

ஏலத்துக்கு 142 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78க்கும், குறைந்தபட்சமாக ரூ.56க்கும் ஏலம்போனது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.29 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 11 விவசாயிகள் 142 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 7, 135 கிலோ.

இதில் கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.78க்கும், குறைந்தபட்சமாக ரூ.56க்கும், சராசரியாக ரூ.76க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 5.29 லட்சம்.ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

X

Maalai Malar
www.maalaimalar.com