search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்தடையால்"

    • மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆர்.எஸ். வழித்தடத்தில் குட்டைமுக்கு பகுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மின்கம்பம் சேதம்

    இதில் மின்கம்பம் சேதமடைந்து சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. இந்த மின்கம்பத்தின் வழியாக சென்ற மின் வயர்களும் சேதமடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிபாளையம் போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாலையில் மின்கம்பம் விழுந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சேதமடைந்த மின்கம்பம் மற்றும் மின் வயர்களை அப்புறப்படுத்தி சாலையை சீரமைத்தனர். இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.

    20 மணி நேர மின்தடை

    இதனிடையே மின் கம்பம் உடைந்து விழுந்ததால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அப்பகுதி இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

    இதையடுத்து நேற்று காலையில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6 மணியளவில் மின்கம்பம் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதியில் சுமார் 20 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    • குமாரபாளையத்தில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியில் சிக்கி மின் கம்பி அறுந்து விழுந்தது.
    • மின் கம்பி அறுந்ததால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதியுற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தேவூர், புள்ளாக்கவுண்டம்பட்டி, வெள்ளாளபாளையம், செட்டிபட்டி, அரசிராமணி உள்ளிட்ட பல கிராமங்களில் விளையும் கரும்புகளை விவசாயிகள் லாரிகள், டிராக்டர்கள் மூலமாக குமாரபாளையம் எடப்பாடி சாலை வழியாக பள்ளிபாளையம் அருகே உள்ள சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    இதில் மின் கம்பிகள் அறுந்து விடுவது, மின் கம்பங்கள் சாய்வது அடிக்கடி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு கரும்பு லோடு ஏற்றிய லாரி காவேரி நகர் பகுதியில் வரும் போது மின் கம்பிகள் கரும்பில் சிக்கி இழுத்து வந்ததில் பல மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    அந்த நேரத்தில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் எந்த வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனால் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பு வழங்கும் பணியை செய்தனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள். மின்வாரிய அதிகாரிகளின் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    ×