காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு

காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம்போல் காட்சியளிக்கிறது.
காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம்போல் காட்சியளிக்கிறது.
Published on

ராமேசுவரம்

ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டு வெளி யேறும் தண்ணீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வரும் நிலையில் நகராட்சி சார்பில் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி நீருற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது.

இந்தநிலையில், காவேரி கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் நாள் தோறும் வழங்கப்படும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது 80 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை மட்டும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் ராமேசு வரத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு எற்பட் டுள்ளது.

மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைந்துள் ளனர்.

சேதமடைந்துள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கனவம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் ராமேசுவரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com