search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "victim"

    • வெங்க டேசன் மனைவி பத்மாவதி ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போடப்பட்டிருந்தது,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமம் வெங்க டேசன் மனைவி பத்மாவதி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.வீட்டிற்கு சென்ற பிறகு வயிறு பகுதியில் அதிக வலியின் காரணமாக அதே கடலூர் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு பரிசோதனை செய்த போது பத்மாவதியின் குடல், கர்ப்பவாய் இரண்டையும் சேர்த்து தையல் போட்டுள்ளதை ஜிப்மர் டாக்டர்கள் கண்டறிந்தனர்

    இது தொடர்பாக கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்துள்ளனர். இதன் மீது கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டும், தங்களை எந்த விசாரணைக்கும் அழைக்கவில்லை என்று கூறி பத்மாவதியிpf உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.பின்னர் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
    • இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
    • இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் கடந்த 11-ந்தேதி மாலை 6.15 மணி அளவில் கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். கை, கால்களில் அடிபட்டு பேச முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டிைய மீட்டு பொதுமக்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரவு 7.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மூதாட்டி ெபயர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த விபத்து குறித்து சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜீ மகன் சாமிநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பலியான மூதாட்டி பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டிருந்தனர்.
    • அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 58). கூலித்தொழிலாளி.

    இவரும் இவரது நண்பரும் நேற்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டி ருந்தனர். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பின்னால் அமர்ந்தி ருந்த ராமச்சந்திரன் கீழே விழுந்து சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்த வர்கள் ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார்.

    இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 'விக்டிம்' ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.
    • இதன் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

    பா.ரஞ்சித், வெங்கட்பிரபு, சிம்புதேவன், எம்.ராஜேஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆந்தாலஜி படம் 'விக்டிம்'. இதில், அமலாபால், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், பிரசன்னா, தம்பி ராமையா, கலையரசன், நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    விக்டிம் போஸ்டர்

    இயக்குனர் வெங்கட்பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி மற்றும் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் இயக்குனர் எம்.ராஜேஷ், 'மிரேஜ்' கதையையும் இயக்குனர் சிம்பு தேவன் 'கொட்டை பாக்கு வத்தலும் மொட்டை மாடி சித்தரும்' என்ற கதையும் பா.ரஞ்சித், 'தம்மம்' மற்றும் வெங்கட்பிரபு 'கன்ஃபெஷன்' ஆகிய கதைகளை இயக்கியுள்ளனர்.

    நான்கு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'விக்டிம்' ஆந்தாலஜி படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை பொறுத்தவரை தனக்கே உரிய பாணியில் இயக்குனர்கள் கதைகளை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • கோவை சாய்பாபா காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார்.
    • பொள்ளாச்சியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.

    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவரது மனைவி ரோகினி (39). இவர்களது மகன் விஜேந்திரன்.

    இவர் சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் செந்தில்குமாரின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் குடும்பத்தினர் ஒரே இடத்தில் கூடி கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து பொள்ளாச்சியில் உள்ள ஒரு தோட்டத்தில் நேற்று நிகழ்ச்சி நடந்தது. அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்றனர். அப்போது விஜேந்திரன் அங்கு வந்து இருந்த 2 குழந்தைகள் சுதர்சன் மற்றும் தீராஜ் ஆகிேயாரை அழைத்து கொண்டு தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகே குளிக்க சென்றார்.

    அங்கு 3 பேரும் மகிழ்ச்சியாக குளித்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக விஜேந்திரன் தவறி கிணற்றில் விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற 2 குழந்தைகளும் சத்தம் போட்டனர்.

    அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் விஜேந்திரன் கிணற்றில் தத்தளிப்பதை கண்டு உடனே தண்ணீரில் குதித்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.

    ஆனால் அதற்குள் விஜேந்திரன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர். இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவன் விஜேந்திரன் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது.
    • காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்

    புதுடெல்லி:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காலை அரசு பஸ் (எண் 14) புறப்பட்டு சென்றது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    காலை 8.10 மணியளவில் அச்சரப்பாக்கம் அடுத்த தொழப்பேடு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது முன்னால் இரும்பு கம்பியை ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி லாரி ஒன்று சென்றது. அந்த லாரியை அரசு பஸ் டிரைவர் முந்தி செல்ல முயன்றார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் இடது புறத்தில் இருந்த லாரியின் பின்பக்கத்தில் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் இடதுபுறம் முழுவதும் நொறுங்கியது.

    இடதுபுற இருக்கைகளில் ஜன்னல் ஓரம் இருந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், மேல் மருவத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மற்றொரு ஆண் பயணியும் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

    எனது எண்ணங்கள் அன்புக்குரியர்களை இழந்தவர்களின் குடும்பத்தோடு உள்ளது. காயம் அடைந்துள்ளவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி தாக்குதலை தொடங்கியது. 5 மாதங்களுக்கு மேல் இந்த தாக்குதல் நீடித்து வருகிறது.

    இந்த போரில் ஏராளமான வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகிவிட்டனர். பல நகரங்கள் ரஷியாவின் மும்முனை தாக்குதலால் சீர்குலைந்து போய் உள்ளது.

    உயிருக்கு பயந்து பொதுமக்கள் அங்கிருந்து காலி செய்து ஓடி விட்டனர்.

    ரஷியபடைகள் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளது. அங்குள்ள பெரும்பாலான நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டன. லிவிசான்ஸ்சா நகரத்தை பிடிக்க தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனுக்கு சொந்தமான ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிவிட்டன.

    இந்த தீவில் இருக்கும் ரஷியபடைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் ஏற்றி சென்ற படகுகள் மீது உக்ரைன் படையினர் ஆளில்லாத விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

    உக்ரைன் வீரர்களின் உக்கிரமான தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறியதாக உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இதனால் ஸ்னேக் தீவை உக்ரைன் தன் வசப்படுத்தி உள்ளது.

    ஸ்னேக் தீவில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய சில மணி நேரங்களில் உக்ரைன் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான ஓடேசாவில் உள்ள பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் மீது ரஷியா சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

    இந்த தாக்குதலில் அந்த கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உள்பட 6 பேர் இறந்தனர்.

    இதுபற்றி அறிந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மேலும் 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் பெயர் உடனடியாக தெரியவில்லை.

    இந்த தாக்குதலில் மேலும் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    • ரெயிலில் இருந்து விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் பெண்ணின் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெச்சல்லா ஆனிமரி உடல் விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    சேலம்:

    பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெச்சல்லா ஆனிமரி (வயது 35).

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான கேரளாவை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி பகுதியில் வந்த போது ரெயிலில் இருந்து விழுந்து ரெச்சல்லா ஆனிமரி பலியானார்.

    இதையடுத்து அவருடைய உடலை தர்மபுரி ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெச்சல்லா ஆனிமரி இறந்த விவரம் குறித்து தூதரகம் வழியாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய சகோதரி நோரா சேலம் வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்தியா வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

    இதனால் இந்தியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் வழியாக தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை அனுப்பி வைக்கக் கோரி உறவினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் மும்பையில் செயல்பட்டு வரும் ஜான் பிண்டோ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் அதுதொடர்பான கடிதத்தை சேலம் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ரெச்சல்லா ஆனிமரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பிற்பகலில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    • திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்.
    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது26) ஆட்டோ ஓட்டுனர்.

    நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் ஈக்காடு அருகே புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பூண்டி இணைப்பு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பூண்டி இணைப்பு கால்வாயில் 831 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் திடீரென ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முன்றும் முடிய வில்லை.

    இது குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஹரிசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இணைப்பு கால்வாயில் திறந்து விடப்பட்ட நீரை பொதுப் பணித் துறை அதிகாரிகளின் உதவியோடு நிறுத்தப்பட்டன. ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் தீயணைப்பு துறையினர் கால்வாயில் இறங்கி தேடும் பணியை கை விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரீசின் நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக ஹரிசை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

    ஆவடி அடுத்த மோரை கால்வாயில் ஹரிஷின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. புல்லரம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.

    ராஜபாளையம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம் அருளாச்சியை சேர்ந்த அரவிந்த்(வயது24),அவரது தம்பி ராஜதுரை(21), இவர்களது மாமா மகன் சசி(20), நண்பர் விஸ்வநாத பிரதீப் ஆகிய 4 பேரும் பக்கத்து கிராமமான டி.ராமநாதபுரத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரது காரை வாங்கி கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதியபேருந்துநிலையம் அருகே உள்ள சினிமா தியேட்டரில் அண்ணாத்தே படத்தின் இரவு காட்சிக்கு சென்றனர். அங்கு படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஒருமணி அளவில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை விஸ்வநாதபிரதீப் ஓட்டினார்.

    தென்காசிரோட்டில் சோலைசேரி மண்ணோடி கண்மாய் அருகே கார் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து 3 முறை உருண்டு தலைகுப்புற கவிழந்தது.

    இதில் தூக்கிவீசப்பட்ட சசி சம்பவ இடத்திலேயே பலியானார்.மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் ஊரக காவல்நிலைய சகறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அய்யம்பேட்டை அருகே ரெயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத ஆண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    அய்யம்பேட்டை அருகே அரியமங்கை ரெயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உடல் சிதறி கிடப்பதாக தஞ்சை ரெயில்வே இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் சென்னை-திருச்சி சோழன் விரைவு ரெயில் அவர் மீது மோதி இருக்கலாம் என தெரியவந்தது.

    இருப்பினும் அவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×