கார் மோதி பலியான மூதாட்டி யார்?

கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
கார் மோதி பலியான மூதாட்டி யார்?
Published on

சேலம்:

சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் கடந்த 11-ந்தேதி மாலை 6.15 மணி அளவில் கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். கை, கால்களில் அடிபட்டு பேச முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டிைய மீட்டு பொதுமக்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரவு 7.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மூதாட்டி ெபயர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த விபத்து குறித்து சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜீ மகன் சாமிநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பலியான மூதாட்டி பற்றி விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com