search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரில்"

    • தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
    • பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்காதின்னிபட்டியை சேர்ந்தவர் அழகன் மகன் ஏழுமலை (40). லாரி லோடு மேனாக வேலை செய்து வந்தார். இவர் விடுமுறை தினமான நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அங்குள்ள நத்துக்குளிப்பட்டி - பெரியசாமி கோவில் போகும் வழியில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றார் அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரது உடலை மீட்டனர்.

    தொடர்ந்து கொல்லிமலை செம்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஏழுமலை உடலை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.
    • விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.

    நேற்று அவர் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி அருகே உள்ள விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாதம்மாள் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே மது போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பலியானார்.
    • இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணா புரம் எட்டிக்குட்டைமேடு, இலவம்பாளையம் கிராமம் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 32 ). விசைத்தறி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பழனிசாமி நேற்று தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல், செல்வம் ஆகியோருடன் சேர்ந்து வெள்ளாளபுரம் அருகே உள்ள செங்காடு ஏரி பகுதியில் குளிக்க சென்றார். அங்கு சென்ற நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    மது போதையில் இருந்த அவர்கள், செங்காடு, தென்கரை மதகுப்பகுதியில் தண்ணீரில் குதித்து விளையாடிய போது பழனிசாமி தவறுதலாக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் எடப்பாடி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் ஏரி பகுதியில் பழனிசாமியின் உடலை நவீன கருவிகளைக் கொண்டு தேடினர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு மழை பெய்ததால் தண்ணீரில் மூழ்கிய பழனிசாமியை தேடும் பணி உடலை மீட்கும் பணியில் தோய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீண்டும் பழனிசாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆழமான பகுதியில் இருந்து பழனிசாமி உயிரிழந்த நிலையில் அவர் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கொங்கணாபுரம் போலீசார், அவர் இறப்பு குறித்து அவருடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் தனியார் நிறுவனத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று விடுமுறை என்பதால் அருகிலுள்ள துலுக்கனூர் ஏரிக்கு நண்பர்களுடன் சென்றார்.

    நண்பர்கள் ஏரியில் இறங்கி மீன் பிடித்தனர். அப்போது ராஜேந்திரனும் மீன்பிடிக்க வருவதாக கூறி ஏரியின் உள்ளே இறங்கினார். ராஜேந்திரன் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தணணீரில் இறங்கிய அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    உடனடியாக நண்பர்கள் கரைக்கு அழைத்து வந்து அவருக்கான முதல் உதவிகளை அளித்தனர். பின்னர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    இது குறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×