மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் துணி துவைக்க சென்ற பெண் நீரில் மூழ்கி சாவு

மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார். விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் துணி துவைக்க சென்ற பெண் நீரில் மூழ்கி சாவு
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.

நேற்று அவர் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி அருகே உள்ள விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாதம்மாள் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com