search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூழ்கி சாவு"

    • குளிப்பதற்காக சென்ற நிலையில் பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 27).கூலி தொழிலாளி. இவர் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியாம்பட்டில் உள்ள உறவினர் பார்த்திபன் வீட்டிற்கு வந்தார்.

    இன்று காலை ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பார்த்திபனின் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

    கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஸ்ரீராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீராம் நீரில் மூழ்கியதால் மீட்க இயலாமல் போனது பணி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஸ்ரீராமை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.
    • விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தபாடி அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மாதம்மாள்(வயது58). இவர் கணவருடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செட்டிப்பட்டி பகுதியில் உள்ள தன் தாயாருடன் வசித்து வந்தார்.

    நேற்று அவர் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி அருகே உள்ள விநாயகர்புரம் என்ற இடத்தில் துணி துவைப் பதற்காக சென்றார். அப்போது தவறுதலாக ஆழமான இடத்திற்குச் சென்ற மாதம்மாள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாதம்மாள் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    • கிணற்றில் குளிக்கும்போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர்.

    கிருஷ்ணமூர்த்தி களம்பூர் பகுதியில் மரப்பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே செல்வம் என்பவருடைய நிலத்தில் உள்ள தரை கிணற்றில் கிருஷ்ணமூர்த்தி குளிக்க சென்றார். மனைவி மற்றும் குழந்தைகள் கண்ணெதிரே குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார்.

    நீண்ட நேரம் அவர் வராததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தண்ணீரில் மூழ்கிய கிருஷ்ணமூர்த்தியை பிணமாக மீட்டனர்.

    இதுகுறித்து வள்ளியம்மாள் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.

    ×