பெங்களூர் வாலிபர் கிணற்றில் மூழ்கி சாவு

குளிப்பதற்காக சென்ற நிலையில் பரிதாபம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பெங்களூர் வாலிபர் கிணற்றில் மூழ்கி சாவு
Published on

ஜோலார்பேட்டை:

கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 27).கூலி தொழிலாளி. இவர் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்மியாம்பட்டில் உள்ள உறவினர் பார்த்திபன் வீட்டிற்கு வந்தார்.

இன்று காலை ஸ்ரீராம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பார்த்திபனின் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றார்.

கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட அவரது நண்பர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து ஸ்ரீராமை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்ரீராம் நீரில் மூழ்கியதால் மீட்க இயலாமல் போனது பணி தோல்வியில் முடிந்தது.இதையடுத்து திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஸ்ரீராமை பிணமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com