என் மலர்

  நீங்கள் தேடியது "drown"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகாவதி அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
  தர்மபுரி:

  தர்மபுரி நியூகாலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். 

  இவரது மகன் விமல்ராஜ் (வயது 27). இவர் எம்.எஸ்சி. வரை படித்து விட்டு வேலை தேடிவந்தார். விமல்ராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் காரில் நேற்று இண்டூர் அருகே உள்ள நாகாவதி அணைக்கு சென்றனர். 

  அங்கு தனது நண்பர்களுடன் விமல்ராஜ் ஆற்றின் கரையோர பகுதிகளில் குளித்தார். சிறிது நேரத்தில் ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது அவர் காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். உடனே அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து விமல்ராஜை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி இறந்து போனார்.

  இதுகுறித்து அவர்கள் விமல்ராஜ் குடும்பத்தினருக்கும், இண்டூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இதில் விமல்ராஜுக்கு நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் மூழ்கி மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

  போலீசார் உடனே ஆற்றில் இறங்கி விமல்ராஜின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அவரது உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். இண்டூர் போலீசார் விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்ற் 2 மாணவர்கள் தண்ணீர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

  பல்லடம்:

  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள தொங்குட்டிபாளையம் ஊராட்சி ஆண்டிபாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த சேமன் மகன் தமிழரசன் (வயது 16),

  அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தர். இவரது மாமா காங்கேயம் படியூர் சண்முகத்தின் மகன் பூபதி (18), கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

  தற்போது கோடை விடுமுறை என்பதால் பூபதி தமிழரசனின் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை இருவரும் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர்.

  அப்போது நீச்சல் தெரியாததால் பூபதி தண்ணீர் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற முயன்ற தமிழரசனையும் தண்ணீர் இழுத்து சென்றுள்ளது.

  இதனை பார்த்த அப்பகுதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சிறு வர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

  சுமார்3 கி.மீ. தூரத்தில் உள்ள சேமலை கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் சிறுவர்களின் சடலங்களை தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவிநாசி பாளையம் போலீசார் மீட்டனர். இருவரின் சடலமும் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

  இச் சம்பவம் குறித்து அவி நாசிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.

  எனவே பொதுமக்கள் வாய்க்காலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவிநாசிபாளையம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
  வடலூர்:

  வடலூர் அருகே குட்டையில் மூழ்கி எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் பலியானான். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

  குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பாட்சி கிராமத்தை சேர்ந்தவர் அரசப்பன். இவர் விருப்பாட்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருடைய மகன் அகிலன்(வயது 15). இவன், நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று எஸ்.எஸ்.எல்.சி. இறுதி தேர்வான சமூக அறிவியல் தேர்வை எழுதினான். தேர்வு முடிந்ததும் மதியம் தனது நண்பர்கள் 5 பேருடன் வடலூர் அருகே தென்குத்து புதுநகர் அடுத்த கல்லுக்குழியில் உள்ள குட்டையில் குளிப்பதற்காக அகிலன் சென்றான்.

  அப்போது மாணவர்கள் அனைவரும் குட்டையில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். இதில் அகிலன் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் நீச்சல் தெரியாததால், தத்தளித்த அகிலன் தண்ணீரில் மூழ்கி பலியானான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

  இந்த நிலையில் மாலையில் குளிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்றனர். அப்போது குட்டை நீரில் மாணவன் பிணமாக மிதந்தான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி வடலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டனர்.

  இதற்கிடையே இதுபற்றி அறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து அகிலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து போலீசார் அகிலனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஏற்கனவே பிளஸ்-2 தேர்வு முடிவடைந்ததும் கடலூர் சில்வர் பீச் கடலில் குளித்த 4 மாணவர்கள் மூழ்கி பலியாகினர். அதை தொடர்ந்து நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த அன்று மாணவன், குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகை அருகே குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்தார். இதுதெடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  நாகப்பட்டினம்:

  நாகை வெளிப்பாளையம் ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மகன் சிவன் மாதவன் (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

  இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவன் மாதவன் தனது நண்பர்கள் 3 பேருடன் காடம்பாடி வண்ணான் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சிவன்மாதவன் திடீரென தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் சிவன்மாதவனை குளத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே பொதுமக்கள் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

  அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். அப்போது சிவன்மாதவனின் உடலை மீட்டனர். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த வெளிப்பாளையம் போலீசார், சிவன்மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பான புகாரின் பேரில் வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேத்துப்பட்டில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சேத்துப்பட்டு:

  திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகன் ரவி (வயது 12), நரசிங்கபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

  அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம், விவசாயி. இவரது மனைவி சிவசக்தி. இவர்களின் மகன் ரூபேஷ் (10), 6-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினமான நேற்று ரவியும், ரூபேசும் நரசிங்கபுரம் பெரிய ஏரியில் குளிக்க சென்றனர்.

  அந்த ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. தற்போது பெய்த மழையால் பள்ளம் இருந்த இடமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் குளிப்பதற்காக இறங்கிய 2 சிறுவர்கள் அந்த பள்ளம் இருந்த இடம் தெரியாததால் அதில் இறங்கிவிட்டனர்.

  அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்க தொடங்கினர். இதனிடையே குளிக்க சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

  அப்போது ஏரியின் கரையில் சிறுவர்கள் 2 பேரின் சட்டை துணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

  பின்னர் சிறுவர்களின் உடலை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஏரியில் வண்டல் மண் எடுத்து பெரிய பள்ளத்தில் 2 சிறுவர்கள் மூழ்கி பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நரசிங்கபுரத்தில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

  பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை மூலம் அரசு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  பின்னர் ரவி மற்றும் ரூபேசின் உடலை பெற்றோர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போலீசாரும், வருவாய்த்துறையினரும் சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதால் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து 2 சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்காளதேசத்தில் கால்பந்து விளையாடிய பள்ளி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  டாக்கா :

  வங்காளதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோகோரியா நகரில் ஒரே பள்ளியை சேர்ந்த 22 மாணவர்கள் இரு அணிகளாக பிரிந்து கால்பந்து விளையாடினர். போட்டி முடிந்த பிறகு அவர்களில் 6 பேர் அருகே உள்ள மதமுகுரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர்.

  அதில், 5 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாணவர்களில் இருவர் சகோதரர்கள் எனும் தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி தலைமை போலீஸ் அதிகாரி பக்ருதின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

  உயிரிழந்த 5 மாணவர்களின் இறுதிசடங்கில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் பார்பவர்களை நெகிழ்சிக்குள்ளாகியது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவாவில் அடுத்தடுத்து நடந்த இருவேறு சம்பவங்களில் தமிழக வாலிபர்கள் இருவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ‘செல்பி’ எடுக்க முயன்ற போது இந்த பயங்கரம் நிகழ்ந்தது.
  பனாஜி:

  உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியாக கோவா மாநிலம் விளங்குகிறது. இங்குள்ள அழகான கடற்கரைகளை காண வரும் சுற்றுலா பயணிகள், அங்கு குளித்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்கி செல்கின்றனர்.

  இங்கு தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான காலகட்டத்தில் அலையின் வேகம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டத்தில் கடலில் குளிக்கவோ, நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது இல்லை. அதைப்போல இந்த ஆண்டும் கடந்த 1-ந்தேதி முதல் 4 மாதங்களுக்கு கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு குழுவினர் கடந்த 16-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றனர். அன்று மாலையில் அவர்கள் வடக்கு கோவாவின் பாகா கடற்கரைக்கு சென்றனர்.

  இதில் வேலூரை சேர்ந்த தினேஷ் குமார் ரங்கநாதன் (வயது 28) என்ற வாலிபர் உள்பட 3 பேர் கடலுக்குள் இறங்கி, அங்கிருந்த பாறை மீது ஏறினர். பின்னர் அந்த பாறையில் நின்றவாறு அவர்கள் தங்கள் செல்போன்களில் ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

  அப்போது ராட்சத அலை ஒன்று திடீரென எழுந்து அவர்கள் 3 பேரையும் இழுத்துச்சென்றது. இதில் தினேஷ் குமார் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர். தினேஷ் குமாரின் உடல் பின்னர் மீட்கப்பட்டது.

  இதைப்போல கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட மற்றொரு குழுவினர், அங்குள்ள சிக்குரியம் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றனர். அவர்களும் கடலுக்குள் இருந்த பாறைகளில் ஏறி ‘செல்பி’ எடுத்துக்கொண்டு இருந்தனர்.

  அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை ஒன்று சசிகுமார் வாசன் (33) என்ற வாலிபரை இழுத்துச்சென்றது. இதில் அவரும் கடலில் மூழ்கி இறந்தார். இதனால் சக நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

  இரு சம்பவங்களிலும் உயிரிழந்த 2 வாலிபர்களின் உடலும் பனாஜி அருகே உள்ள கோவா மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக வாலிபர்கள் 2 பேர் ‘செல்பி’ மோகத்தால் அடுத்தடுத்து கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வானூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விழுப்புரம்:

  வானூர் தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் ராஜேஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்குள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் ராஜேஷ் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத ராஜேஷ், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், ராஜேசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ராஜேஷ், நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
  ×