என் மலர்
இந்தியா

ஆற்றில் மூழ்கி விபரீதம்- குழந்தையை காப்பாற்ற முயன்று 6 பேர் உயிரிழப்பு
- கார்வார் நகரில் உள்ள தண்டேலியின் காளி ஆற்றில் குளித்தபோது விபரீதம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
விடுமுறையை கொண்டாட, உத்தர கனடா மாவட்டத்தின் கார்வார் நகரில் உள்ள தண்டேலியின் காளி ஆற்றில் குளித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு குழந்தையை காப்பாற்ற முயன்றபோது, ஒருவர் பின் ஒருவராக நீரில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 6 பேரில் 4 பேர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






