search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆற்றில் மூழ்கி இறந்த  தனியார் நிறுவன ஊழியர் உடல்  சோழசிராமணி கதவணையில் மீட்பு
    X

    ஆற்றில் மூழ்கி இறந்த தனியார் நிறுவன ஊழியர் உடல் சோழசிராமணி கதவணையில் மீட்பு

    • சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
    • ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணி கதவணை 2-வது மதகில் சிக்கி கிடந்த இளைஞர் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் முப்பாட்டாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் லட்சுமி நாராயணன். இவரது மகன் பரசுராமன்( வயது 30). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள கிறிஸ்டி கம்பெனியில் 6 வருடங்களாக பாய்லர் ஆப ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நட்டாத்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆழமான பகுதியில் குளித்ததால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் காவிரி ஆற்றின் கரையோரம் தேடி வந்து பார்த்தபோது நேற்று சோழசிராமணி கதவணையில் இரண்டாவது மதகில் பரசுராமன் இறந்த நிலையில் பிணமாக மிதநதார்.

    இது குறித்து ஜேடர்பா ளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமனின் உடலை மீட்டு பிரேத சோத னைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடகில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×