என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கிணற்றில் நீச்சல் பழகிய தனியார் வங்கி ஊழியர் தண்ணீரில் மூழ்கி பலி
- நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் கிணற்றில் நீச்சல் பழகிய போது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள பிராந்தகம், பெரியபாளையம் பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் கோகுலபிரகாஷ் (22).
இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கோகுல பிரகாஷ் பெரியபாளையம் பட்டியில் உள்ள வடக்குத் தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழகினார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேலக வுண்டம்பட்டி போலீசார் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து கோகுலபிரகாஷின் உடலை மீட்டனர்.
பின்பு அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.