என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே பூண்டி கால்வாயில் மூழ்கி வாலிபர் பலி
- திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு போக்குவரத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது26) ஆட்டோ ஓட்டுனர்.
நேற்று மாலை அவர் தனது நண்பர்களுடன் ஈக்காடு அருகே புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பூண்டி இணைப்பு கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பூண்டி இணைப்பு கால்வாயில் 831 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் திடீரென ஹரிஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முன்றும் முடிய வில்லை.
இது குறித்து திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஹரிசை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இணைப்பு கால்வாயில் திறந்து விடப்பட்ட நீரை பொதுப் பணித் துறை அதிகாரிகளின் உதவியோடு நிறுத்தப்பட்டன. ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் தீயணைப்பு துறையினர் கால்வாயில் இறங்கி தேடும் பணியை கை விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரீசின் நண்பர்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். இந்த நிலையில் இன்று காலை 2-வது நாளாக ஹரிசை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
ஆவடி அடுத்த மோரை கால்வாயில் ஹரிஷின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. புல்லரம்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.






