search icon
என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
    • ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார்.

    ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக அழைத்து செல்லப்பட்டு இந்திய வாலிபர்கள் சிலரை அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. உதவியாளர்களாக பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் உக்ரைனுக்கு எதிராக போரில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையத்து இந்தியர்கள் சிலர் தங்களை மீட்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையே சமீபத்தில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்பான் (30) போரில் பலியானார்.


    இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணிபுரிந்த மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹெமில் என்ற வாலிபர், ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் ரஷிய படைகள் கைப்பற்றிய கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உள்ள ராணுவ முகாமில் தங்கியிருந்தார்.

    இந்த நிலையில் போரில் ஏவுகணை தாக்குதலில் ஹெமில் பலியாகி விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ரஷியாவில் பணிபுரியும் மற்றொரு இந்தியரான இம்ரான் என்பவர் தெரிவித்தார். போரில் இறந்த ஹெமில் உடலை மீட்டு கொண்டு வர வேண்டும் என்று அவரது தந்தை அஸ்வின் இந்திய தூதரகத்துக்கு பல முறை இ.மெயில் அனுப்பியதாக தெரிவித்தார்.

    • இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சண்டை நீடித்து வருகிறது.
    • உக்ரைனின் பதிலடி தாக்குதலில் ரஷியாவிற்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரஷியா- உக்ரைன் இடையிலான போர் இரண்டு வருடங்களை கடந்து இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ரஷியாவை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதியுதவி அளித்து வருவதுடன் ஆயுதங்களும் கொடுத்து உதவி வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் சென்றிருந்தார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது, ரஷியாவிற்கு எதிராக தொடர்ந்து சண்டையிட 10 ஆயிரம் டிரோன்கள் வழங்கப்படும் என கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே டிரோன்களுக்காக 200 மில்லியன் பவுண்டு ஒதுக்கப்படும் என இங்கிலாந்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது, 125 மில்லியன் பவுண்டு கூடுதலாக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

    10 ஆயிரம் டிரோன்களில் கப்பல்களை குறிவைத்து தாக்கும் ஆயிரம் டிரோன்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன படைகள் கருங்கடலில் ரஷியாவின் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு இங்கிலாந்தின் ஆயுதங்களை இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பயன்படுத்தி வருகின்றன.

    கடந்த செவ்வாய்க்கிழமை உக்ரைன் டிரான் மூலம் ரஷியாவின் போர்க்கப்பலை தாக்கி அழித்தது. இதுவரை மூன்று கப்பல்களை அழித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    • ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை செயல் இழக்க வைத்துள்ளோம் என்கிறது உக்ரைன்.
    • இதுவரை மூன்று கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது.

    ரஷியா- உக்ரைன் நாடுகளுக்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. முதலில் உக்ரைன் பேரழிவை சந்தித்த போதிலும், பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டதில் இருந்து ரஷியாவுக்கு அழிவுகளை கொடுத்து வருகிறது.

    டிரோன் மூலம் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து இரண்டு போர்க்கப்பலை உக்ரைன் மூழ்கடித்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான செர்கெய் கோட்டோவ் என்ற கப்பலை கெர்ச் ஜலசந்தி அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி மூழ்கடித்துள்ளோம் என உக்ரைன் பாதுகாப்பு புலனாய்வு தெரிவித்துள்ளது. அந்த கப்பல் 1300 டன் எடை கொண்டதாகும்.

    செர்கெய் கோட்டோவ்-ஐ இதற்கு முன்னதாக தாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது எனவும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரஷியாவுக்கு எதிரான போரில் பின்னடைவை சந்தித்து வந்தாலும், உக்ரைன் கடந்த சில மாதங்களாக ரஷியாவின் போர்க்கப்பல்களை டிரோன்கள் மூலம் தாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் கருங்கடலில் அரிதான மூலோபாய வெற்றி எனக் கருதப்படுகிறது. கடந்த மாதம் ரஷியாவின் லேண்டிங் கப்பல் இதுபோன்று டிரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

    கடந்த மாதம், ரஷியாவின் 33 சதவீத கப்பல்களை (23 கப்பல் மற்றும் ஒரு நிர்மூழ்கி கப்பல்) செயல் இழக்க வைத்து விட்டோம் என உக்ரைன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    2022 ஏப்ரல் மாதம் மோஸ்க்வா என்ற ஏவுகணை வழிகாட்டி கப்பலை ரஷியா இழந்தது பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

    • உக்ரைனின் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது.
    • இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    கீவ்:

    உக்ரைனுக்கு எதிராக ரஷியா போர் தொடந்து 2 ஆண்டு கடந்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் நிதி உதவி அளித்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைனில் ஒடேசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ரஷியா டிரோன் தாக்குதலை நடத்தியது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

    இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். டிரோன் தாக்குதலில் 18 வீடுகள் சேதமடைந் தன.

    இதுதொடர்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரைனுக்கு ஆயுத விநியோகம் தாமதப்படுத்துவதாகவும், ஆயுதங்களை விரைவாக வழங்கி இருந்தால் ரஷிய டிரோன் தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    • ரஷிய-உக்ரைன் போர் குறித்து இதுவரை டிரம்ப் உறுதியான கருத்து தெரிவிக்கவில்லை
    • பொய் தகவல்களை பரப்ப பில்லியன்களில் செலவு செய்கிறார் புதின் என்றார் ஜெலன்ஸ்கி

    ரஷிய-உக்ரைன் போர் தொடங்கி 2 வருடங்கள் கடந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதி மற்றும் ராணுவ உதவியை தொடர்வதற்கு அமெரிக்க பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

    தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய-உக்ரைன் போர் குறித்து தனது நிலைப்பாட்டையும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

    தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவராக கருதப்படும் டிரம்ப், புதினின் ஆதரவாளராக விமர்சிக்கப்படுகிறார்.

    இந்நிலையில், புதின் மற்றும் டிரம்ப் குறித்து ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்தார்.

    அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது:

    இரண்டு வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்போரில் இதுவரை உக்ரைன் நாட்டு வீரர்கள் 31,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை பரப்ப பில்லியன்களில் புதின் செலவு செய்து வருகிறார். தற்போது அவர் அந்த முயற்சியில் வெற்றி அடைந்தது விட்டாரோ என தோன்றுகிறது.

    ரஷியாவை ஆதரிக்க டிரம்ப் முடிவெடுத்தால், அவர் உக்ரைனுக்கு மட்டுமல்ல, அமெரிக்கர்களுக்கே எதிரானவராக கருதப்படுவார்.


    டிரம்ப், புதின் பக்கம் நிற்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அமெரிக்க ராணுவம் ரஷிய ராணுவத்துடன் போர் புரிந்ததில்லை. அதனால் அவரது உண்மையான நோக்கங்களை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் புதினை எதிர்த்து போரிட்டு வருகிறோம்; எங்களுக்கு தெரியும்.

    நாங்கள் இப்போரில் வெற்றி பெறுவது எங்கள் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளின் கைகளில் உள்ளது.

    இவ்வாறு புதின் தெரிவித்தார்.

    • ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
    • உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என ஜெலன்ஸ்கி கூறினார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 2 ஆண்டு முடிந்து, மூன்றாம் ஆண்டாக தொடர்ந்து நடந்து வருகிறது. ரஷியாவுக்கு எதிரான போர்க்களத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனின் வெற்றி மேற்கத்திய நாடுகளின் ஆதரவைச் சார்ந்துள்ளது. உக்ரைனுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும்.

    ரஷியாவுடனான 2 ஆண்டு போரில் 31,000 உக்ரைன் வீரர்கள் வீர மரணமடைந்துள்ளனர். ஆனால் ரஷிய அதிபர் புதினோ, ஒன்றரை முதல் 3 லட்சம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக பொய் சொல்லி வருகிறார். எங்கள் வீரர்களின் இழப்புகள் ஒவ்வொன்றும் எங்களுக்கு ஒரு பெரிய இழப்பு என தெரிவித்தார்.

    ரஷிய அதிபர் புதினுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களால் காது கேளாத நபருடன் பேசமுடியுமா? எதிரிகளைக் கொல்லும் ஒரு மனிதனுடன் பேசமுடியுமா? அவர் 2030-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருக்க நினைக்கிறார். நாங்கள் விரைவில் வீழ்த்த விரும்புகிறோம் என்றார்.

    • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

    கீவ்:

    உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

    ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

    இந்நிலையில், ரஷியாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், பிப்ரவரி 14 அன்று உக்ரைன் படையினர் கருங்கடலில் ரஷிய கடற்படையின் போர்க்கப்பலை அழித்தனர் என தெரிவித்துள்ளது.

    • ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் வேகமாக ஊடுருவதை தடுப்பதில் துரிதமாக செயல்பட்டவர்.
    • இவரது தலைமையில் பதில் தாக்குதலில் ரஷியாவிடம் இருந்து சில பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியது.

    உக்ரைன் நாட்டின் ஆயுதப்படை தலைமை தளபதியாக இருந்தவர் வலேரி ஜலுன்ஸ்யி. இவரை அந்நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி அதிரடியாக நீக்கியுள்ளார். இருவருக்கும் இடையில் உரசல் இருந்து வந்த நிலையில் தற்போது ஜெலன்ஸ்கி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

    ரஷியப் படைகள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தபோது இவரது தலைமையிலான ஆயுதப்படை சிறப்பாக செயல்பட்டது. இதனால் இரும்பு தளபதி என அழைக்கப்பட்டார்.

    ரஷியாவை தொடக்கத்தில் சமாளித்த போதிலும், அதன்பின் ரஷியப்படைகள் உக்ரைனுக்குள் சென்று பேரழிவை ஏற்படுத்தியது.

    ரஷியாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், தலைமை தளபதி நீக்கப்பட்ட நிலையில், புதிதாக நியமிக்கப்படும் நபர் எப்படி படைகளை வழிநடத்திச் செல்வார் என எதிர்பார்ப்புடன் கூடிய கேள்வி எழுந்துள்ளது.

    ரஷியப்படைக்கு எதிராக உக்ரைன் எதிர்தாக்குதல் என்ற யுக்தியை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. ரஷிய படைகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத போதிலும், உக்ரைன் படையால் சிறிய அளவிலேயே முன்னேற முடிந்தது. தொடர்ந்து முன்னேற முடியாமல் தவித்து வருகிறது. உக்ரைன் போரில் சுமார் 1000 கி.மீட்டரை இழந்துள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

    புதிதாக நியமிக்கப்படும் தளபதி தலைமையில் உக்ரைன புதிய வியூகத்தின் போரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் வழங்க உத்தரவாதம் வழங்காத நிலையில், ரஷியா தொடர்ந்து டிரோன் தாக்குதல் மூலம் வளங்களை அழிப்பதை தடுக்க உக்ரைன் அதிக அளவில் செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

    டிரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் மட்டுமே உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் போட்டியிட முடியும் என வலேரி ஜலுஸ்ன்யி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன
    • அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைனியர்கள் நம் குடியுரிமையை துறக்கின்றனர் என்றார் ஜெலன்ஸ்கி

    2022 பிப்ரவரி 24 அன்று ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது.ீ

    போர் தொடங்கி 2 வருட காலம் நிறைவடைய உள்ள நிலையில் இரு தரப்பிலும் உயிரிழப்பு மற்றும் பெரும் கட்டிட சேதங்கள் ஏற்பட்டும், போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் இல்லை.

    1919 ஜனவரி 22 அன்று கிழக்கு மற்றும் மேற்கு உக்ரைன் இணைந்தன.

    தேசிய ஒற்றுமை தினம் எனும் பெயரில் இந்த இணைப்பை கொண்டாடும் விதமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    அயல்நாட்டில் வாழும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நன்றி. ஆக்கிரமிப்பின் போது உக்ரைனுக்கு முழு ஆதரவும் வழங்கிய அவர்களுக்கு நன்றி.

    உக்ரைனுக்காக போரிட வந்த அயல்நாட்டில் வசித்த நம் நாட்டினருக்கும் நன்றி.

    நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லாததால், அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள், உக்ரைன் பாஸ்போர்டை வைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

    வெர்கோவ்னா ராடாவில் (உக்ரைன் பாராளுமன்றம்) ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

    உக்ரைன் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்து இந்த வரைவு சட்டமாக ஒரு வருட காலம் ஆகும்.

    ரஷிய படைகளின் தாக்குதல் குறித்த செய்தி கேட்டவுடம் அயல்நாடுகளில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் தாய்நாட்டை காக்க உடனடியாக திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்டனர்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டு வருடங்கள் முடிவடைய இருக்கிறது.
    • ரஷியா மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்த நிலையிலும், போரில் முழுமையாக வெற்றிபெற முடியவில்லை.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு முழு அளவில் படையெடுத்தது. உக்ரைனை பிடிக்கும் வரையில் போர் ஓயாது என ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    என்றபோதிலும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமிக்க முடியவில்லை. பிடித்து வைத்திருந்த சில இடங்களை உக்ரைன் மீட்டது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் சண்டையிட்டு வருகிறது. இதனால் ரஷியா மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்து வருகிறது.

    இந்த நிலையில்தான் போர் நிறுத்தம் என்பதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். உக்ரைன் மீதான சண்டையின் நிறுத்தம், போர் நிறுத்தம் என்ற அர்த்தமாகிவிடாது. அது ரஷியா மீண்டும் ஆயுதங்களையும், வீரர்களையும் கட்டமைக்க உதவுவதாக இருக்கும். நாங்கள் வீழ்த்தப்படுவோம். அடக்குமுறை தோற்கடிக்கப்பட வேண்டும். அடக்குமுறையாளர் தோல்வியாளராக இருக்க வேண்டும்" என்றார்.

    • ரஷியா ஏவும் பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இந்நிலையில், உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினார்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு மந்திரி  டிமிட்ரோ குலேபா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருடன் தொலைபேசியில் உரையாடினேன். இந்தியா-உக்ரைன் இடையிலான அரசு ஆணையத்தின் முதல் கூட்டத்தை எதிர்காலத்தில் நடத்த நாங்கள் ஒப்புக்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

    • பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
    • மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.

    இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன

    இந்நிலையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன.

    இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷியா படையெடுப்பை தொடங்கியபின் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான் தாக்குதல் இது என்று உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷியாவின் 87 ஏவுகணைகள், 27 டிரோன்களை உக்ரைன் படைகள் இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×