என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: உக்ரைன் அதிபர் ஆதரவு
    X

    ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை: உக்ரைன் அதிபர் ஆதரவு

    • உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார்.
    • ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.

    கீவ்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் பதவி ஏற்றபின் ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.

    உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.

    ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.

    இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×