என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செர்னோபில்"

    • 'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • 1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது.

    உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்களின் ரோமம் நீல நிறமாக மாறியுள்ள விசித்திரம் அரங்கேறி உள்ளது.

    'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' என்ற தொண்டு நிறுவனம் பகிர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்த நாய்கள் 1986 செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியை சேர்ந்தவை.

    இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வனவிலங்குகளுடன் வாழ்கின்றன.

    'டாக்ஸ் ஆஃப் செர்னோபில்' அமைப்பு இங்கு உள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான கருத்தடை மற்றும் மருத்துவ பரிசோதனை செய்ய சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை கண்டறிந்ததாக அவ்வமைப்பின் தெரிவித்தனர்.

    அவை இதன்முன் சாதாரணமாகவே இருந்தன என்றும் அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்துடன் தொடர்ந்து கொண்டதில் அவற்றின் நிறம் மாறியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் ரோமம், தோல் மற்றும் இரத்தத்தின் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    1986 ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுமின் நிலையத்தின் நான்காவது அணு உலை வெடித்தது. அபாயகரமான கதிரியக்கப் பொருட்கள் காற்று மண்டலத்தில் பரவி, உக்ரைன், பெலாரஸ், ரஷியா மட்டுமின்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவியது.இதில் பலர் உயிரிழந்தனர்.

    மேலும் கதிரியக்கத்தால் மக்களுக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 30 கி.மீ அணுமின் நிலையத்தை சுற்றளவுள்ள பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

    ரஷியாவின் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் எரிபொருளை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. #Russia #FloatingNuclearPowerStation
    மாஸ்கோ:

    ஒரு சரக்கு கப்பலை போல தோற்றமளிக்கும் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷியா உருவாக்கியது. இந்த மிதக்கும் அணுமின் நிலையம் கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், நேற்று முர்மன்ஸ்க் நகரில் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு தனது இலக்கை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

    இந்திய மதிப்பில் 654 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையம் 144 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டது. முழுவதும் பனி படர்ந்த ஆர்டிக் வளைவில் உள்ள பெவெக் என்ற நகருக்கு அடுத்தண்டு இறுதிக்குள் இந்த மிதக்கும் அணுமின் நிலையம் சென்றடையும். அங்குள்ள ஊர்களுக்கு இதன் மூலம் மின்சாரம் அளிக்கப்பட உள்ளது.



    மேலும், எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளுக்கும் இதன் மூலம் மின்சாரம் கிடைக்கும். இது செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் ரஷியாவில் ஏற்கனவே இருக்கும் இரண்டு பழைய மின் நிலையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளது. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை நினைவு கூர்ந்து இந்த மிதக்கும் அணுமின் நிலையத்திற்கும் பலர் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர்.

    சர்வதேச விதிமுறைகளின் படி அணுமின் நிலையம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற இயற்கை பேரிடரை இது தாங்கும் என கப்பலை தயாரித்த ரஷிய அரசு நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளது. மிதக்கும் கப்பல் என்றாலும், இதன் உள்ளே கப்பலுக்கு உண்டான எந்த பாகங்களும் கிடையாது. இழுவைகள் மூலமே இந்த மிதக்கும் அணுமின் நிலையம் இழுத்துச் செல்லப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×