search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலியான"

    • அமைச்சர் மனோ தங்கராஜ்-ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வழங்கினர்
    • மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    மார்த்தாண்டம்:

    கிள்ளியூர் அருகே உள்ள தூத்தூர் ஊராட்சிக் குட்பட்ட கே.ஆர்.புரம், சின்னத்து றையை சேர்ந்த மீனவர் லெரின்ஷோ (வயது 26), ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் ஆழ்கட லில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடந்த மாதம் 9-ந் தேதி தவறி கடலில் விழுந்து இறந்தார். அவரது குடும்பத்தின் வறுமை சூழலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழ்நாடு கோரிக்கை வைத்தார்.

    இதனை ஏற்று, மீனவர் லெரின்ஷோ குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று லெரின்ஷோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ. 2 லட்சத்தை வழங்கினர். பத்மனாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மீன்வள துறை துணை இயக்குநர் சின்னகுப்பன், ஆய்வாளர் லிபின் மேரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
    • தமிழக அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறியதாவது:-

    தமிழக அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த நிதியை முறையாக செயல்படுத்தாததால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுகிறது. கோவளத்தில் தற்போது தூண்டில் வளைவு அமைக்க ரூ.17 கோடியை 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த தூண்டில் வளைவை நேராக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வளைத்து தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.எனவே அந்த தூண்டில் வளைவு பணியை நிறுத்துவதுடன் நேராக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.இதைத்தொடர்ந்து தூத்தூரை சேர்ந்த மீனவர் மரிய ஜஸ்டின் அவரது சகோதரர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எனது சகோதரர் வெளிநாட்டில் போலீசா ரால் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்ட போது உடனடியாக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் நேரடியாக வந்து உரிய நிவாரணங்கள் வழங்கப்படும், மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர்.அந்த நிவாரணம் எங்களுக்கு போதுமானதாக இல்லை.எனவே இந்த நிவாரணம் எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கூறியிருந்தோம். இந்த நிலையில் தற்போது எங்களுடைய வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தற்கொலை செய்து கொண்டதாகவே வழக்குப்பதிவு செய்துள்ள னர்.3 மாதங்களாக நித்தரவிளை போலீசார் அந்த பிரேத பரிசோதனை அறிக்கையை தராமல் வைத்துள்ளனர். எனவே நித்திரவிளை போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தோனேசியா காவல் படையினருக்கு நித்திரவிளை போலீசார் ஆதரவாக இருப்பது போன்று தோன்றுகிறது.எனவே உடனடியாக எனது சகோதரர் வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். கள்ளச்சாராய சாவிற்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு வெளிநாட்டில் எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டதற்கு ரூ.3 லட்சம் வழங்கி உள்ளதை வேதனையாக உள்ளது. எனது சகோதரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நான் ஆளுநரையும், மீனவள துறை கமிஷனையும் சந்தித்து பேசி உள்ளேன். இது தொடர்பாக 210 மனுக்கள் இதுவரை அளித்துள்ளேன். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனியும் காலம் கடத்தினால் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஒரு மாத காலத்திற்குள் கொலை வழக்காக மாற்றுவதுடன் உரிய நிவாரணம் வழங்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஸ்ரீதர் கூறுகையில், கோவளம் பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தூண்டில் வளைவு பணியை நீட்டிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறு திட்ட மதிப்பீடு தயாரித்து தான் அந்த பணியை மேற்கொள்ள முடியும். தூத்தூர் மீனவர் மரிய ஜஸ்டின் பலியானது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது.
    • இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் பட்டர்பிளை மேம்பாலத்தில் கடந்த 11-ந்தேதி மாலை 6.15 மணி அளவில் கார் ஒன்று சாலையில் நடந்து சென்ற 70 வயது மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். கை, கால்களில் அடிபட்டு பேச முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டிைய மீட்டு பொதுமக்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரவு 7.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மூதாட்டி ெபயர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த விபத்து குறித்து சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜீ மகன் சாமிநாதன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, பலியான மூதாட்டி பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
    • அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் சிவன் கோவில் குட்டை அமைந்துள்ளது. இதில் புளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் மகள் திலகவதி (17), ஆலம்பாளையம் கிருஷ்ண சாமியின் மகன் அஸ்வின் (11) மற்றும் சவுமியா, தன்யா, மனோஜ், பவித்ரா ஆகியோர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்த குழந்தைகள் பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் திலகவதி மற்றும் அஸ்வின் குட்டையில் மூழ்கி விட்டனர் என கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிரேத பரிசோதனைக்காக 2 சிறுவர்கள் உடல் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோ தனை முடிந்து இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • ரெயிலில் இருந்து விழுந்து பலியான பிலிப்பைன்ஸ் பெண்ணின் உடல் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
    • ரெச்சல்லா ஆனிமரி உடல் விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    சேலம்:

    பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ரெச்சல்லா ஆனிமரி (வயது 35).

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான கேரளாவை சேர்ந்த டாக்டர் ஹரிஷ் என்பவருடன் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது சேலம் மாவட்டம் காருவள்ளி பகுதியில் வந்த போது ரெயிலில் இருந்து விழுந்து ரெச்சல்லா ஆனிமரி பலியானார்.

    இதையடுத்து அவருடைய உடலை தர்மபுரி ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரெச்சல்லா ஆனிமரி இறந்த விவரம் குறித்து தூதரகம் வழியாக அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய சகோதரி நோரா சேலம் வருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் இந்தியா வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.

    இதனால் இந்தியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் வழியாக தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை அனுப்பி வைக்கக் கோரி உறவினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் மும்பையில் செயல்பட்டு வரும் ஜான் பிண்டோ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் ரெச்சல்லா ஆனிமரி உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் அதுதொடர்பான கடிதத்தை சேலம் ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ரெச்சல்லா ஆனிமரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பிற்பகலில் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் அவரது சொந்த நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    ×