search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN CM"

    • அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    உலகம் முழுவதும் நாளை (மார்ச்-8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இத்தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளையுயும், நலன்களையும் முழுமையாக பெறும்வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும் என்ற உறுதியுடன் மகளிர் தன வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு.
    • 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது திருவோணம் தாலுகா.

    தஞ்சாவூரில் புதிய தாலுகாவாக திருவோணம் உருவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.

    திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்கள் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு செல்ல வேண்டி இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வஙெ்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாகிறது.

    • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

    பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள்.
    • கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள். 70 வயது நிறைவடைந்து 71-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவருக்கு கட்சி தலைவர்கள், திமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளம் மூலமாக மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியத்திடன் வாழ வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    அரசியல் ரீதியாக பிரதமர் மோடிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையில் கடும் மோதல் இருந்து வருகிறது.

    இந்த வாரத் தொடக்கத்தில் பல்லடம், நெல்லை, தூத்துக்கடி வந்த பிரதமர் மோடி திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்தார். மக்களவை தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலடியாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. தோல்வி பயம் அவர் முகத்தில் தெரிகிறது. அந்தக் கோபத்தைத்தான் அவரது முகம் காட்டுகிறது. தி.மு.க.வைப் பற்றியும், கழக அரசைப் பற்றியும் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார் பிரதமர்.

    அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தார், எதற்கு நாம் தடையாக எப்படி இருந்தோம் என்று பட்டியல் போட்டிருந்தால் பதில் சொல்ல வசதியாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம்.
    • ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைப்பு.

    சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தையும், பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடத்தில் 'கலைஞர் உலகம்' என்ற பெயரில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் என்றாலே போராட்டம்தான்.

    அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம்தான் இந்த நினைவிடம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது.
    • தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியீடு.

    சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், புதிய மேம்பாலத்திற்கான கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

    அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசின் 2023 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு.
    • ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் பதிவு.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பெற காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளன.

    பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்து வெற்றி பணியை தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் பணி தொடங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    அந்த பதிவில், தொடங்கியது பாராளுமன்ற தேர்தல் 2024 பணி என்றும், பணி முடிப்போம்.. வெற்றி வாகை சூடுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அதில், இந்தியா வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • நான்கு மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ளவும், மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் உடனடியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.

    மேலும் அப்பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை, காவல் துறையினர் மற்றும் அனைத்து அரசுத்துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த சூழ்நிலையில் முன்னதாக இன்று தூத்துக்குடிக்குச் செல்வதாக அறிவித்திருந்த முதலமைச்சர், மத்தியக் குழு இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு உடனிருக்க வேண்டிய நிலையைக் கருத்தில் கொண்டு நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மிச்சாங் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள்
    • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வசிக்கும் 37 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களது உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடிந்த நிலையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கம் இன்னும் தொடர்வதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இன்னும் தங்கள் வழக்கமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு திரும்பவில்லை.

    புயல் பாதிப்பிற்குள்ளான பலர்/வணிக நிறுவனங்கள் பல்வேறு நோக்கங்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களது நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்போது தவிக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணைகளைத் தளர்த்திட வேண்டிய அவசரத் தேவை உள்ளது.

    அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அகில இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வழங்கியுள்ள அனைத்து காலக் கடன்களுக்கும், 2023 டிசம்பர் 1 முதல் 2024 பிப்ரவரி 29 வரை தவணைத் தொகையைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து, கடன் தவணையையும், வட்டியையும் செலுத்துவதில் மூன்று மாதங்கள் ஒத்திவைக்க அனுமதிக்கப்படலாம்.

    எனவே, பிரச்சினையின் அவசரத்தை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் திருப்பிச் செலுத்தும் சுமையைக் குறைக்கும் வகையில், தேவையான உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
    • எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் குழு தலைவருமான சோனியா காந்தியின் பிறந்த நாள் இன்று. 77 வயது முடிவடைந்து 78-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

    பிறந்தநாளையொட்டி சோனியா காந்திக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் "அர்ப்பணிப்புள்ள பொது வாழ்க்கையின் உதாரணமாக விளங்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது அனுபவம் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் "சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் குணமடைந்து அரசுப் பணிக்கும், கட்சிப் பணிக்கும் திரும்புவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

    தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில் பிற்பகல் சுமார் 2 மணி நிலவரப்படி 340-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்துவரும் பாஜக கூட்டணி அபாரமான வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்



    இரண்டாவது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைகிறார்கள். தங்களது தலைமையில் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.


    ×