என் மலர்

    நீங்கள் தேடியது "chennai rain"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் ஓரிரு இடங்கள் லேசான மழை பெய்தது.
    • இந்த மழையால் கோடை வெயில் சற்று தணிந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக, சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்தது. சென்னை எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது. இந்த மழை காரணமாக கோடை வெயில் சற்று தணிந்தது. கோடை மழையால் வெப்பம் குறைந்ததை தொடர்ந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • இன்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஓரிரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

    இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் அதிகாலை மழை பெய்து வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
    • 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

    இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மண்டலமாக வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர்.

    அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை மாநகர சாலைகள் ஏற்கனவே மழையால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று இந்த மாவட்டங்கள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக 12 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருக்கிறது. இதனால் நேற்று முதலே பலத்த மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இன்று காலையிலும் 5 மணியளவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில இடங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது.

    செங்குன்றம், புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், டாணா தெரு, ஓட்டேரி, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    பெரம்பூர் ஜமாலியா பகுதியில் எப்போதும் போல சாலையில் மழைநீர் தேங்கியது. பட்டாளம், வியாசர்பாடி, கன்னிகாபுரம், புளியந்தோப்பு, ஸ்பென்சர் சாலை, சூளை உள்பட வட சென்னையின் பல இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.

    பெரம்பூர் பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வியாசர்பாடி ஜீவா சுரங்கபாதை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

    அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி நகர், திருவள்ளுவர் நகர், நம்மாழ்வார் பேட்டை மார்க்கெட், ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பு வடக்கு காலனி, வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், சீனிவாசன் நகர் வடக்கு ஜெகநாதர் நகர், ரெட்டி தெரு, வில்லிவாக்கம் மார்க்கெட், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பட்டரவாக்கம் பால் பண்ணை சாலை, மேனாம்பேடு கருக்கு, டி.டி.பி.காலனி, கள்ளிக்குப்பம் காந்திநகர், அத்திப்பட்டு அயப்பாக்கம் சாலை, அம்பத்தூர் அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று இரவு திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியில் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்தது.

    இதனால் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அம்சா தோட்டம் பகுதிக்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கீழே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

    மேலும் மாநகராட்சி சார்பில் 11 ஆயிரம் பேர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகர சாலைகள் ஏற்கனவே மழையால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேங்கிய மழைநீரில் சில இடங்களில் பெரிய பள்ளங்கள் இருந்தன. இதில் மோட்டார் சைக்கிகள் சிக்கிக்கொண்டன. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் தவறி விழுந்தும் பாதிப்பை சந்தித்தனர்.

    சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் கத்திவாக்கம், கொங்குரெட்டி, துரைசாமி சுரங்க பாதைகளில் தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இதனால் சுரங்க பாதைகளில் வாகன போக்குவரத்து தடை படவில்லை. எப்போதும் போல அனைத்து வானங்களும் சென்றன.

    கடந்த வாரம் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் வடிந்திருந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் மழைநீர் வடிந்த இடங்களில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள் மழை பாதிப்பில் இருந்து தப்பினர். அதே நேரத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் பலர் மழையால் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம், புதுவை பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில், அண்ணாசாலை, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை, திருப்போரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.
    • மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அனைத்து வார்டுகளிலும் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி சென்னை முழுவதும் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடந்தது. மாநகராட்சி மருத்துவ துறையுடன் இணைந்து மக்கள் நல்வாழ்வு துறை டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் இந்த முகாமை நடத்தினார்கள்.

    காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடந்தன. பெரும்பாலான முகாம்களில் கூட்டம் அலைமோதியது.

    சேறு நிறைந்த தண்ணீரில் விளையாடியதால் சேற்றுப் புண்கள் ஏற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்களுக்கு மருந்து தடவி தொடர் சிகிச்சைக்கு மருந்தும் வழங்கினார்கள்.

    பலர் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொல்லைகளுக்காக சிகிச்சை பெற வந்திருந்தனர். அவர்களை பரிசோதித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.

    முகாம்களில் நிலவேம்பு குடிநீரும் வழங்கப்பட்டது. மழைக் காலங்களில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் வழங்கினார்கள்.

    மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-

    2006-ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது இதே போல் மழைக்காலத்தில் 155 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது 64 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றனர். அது இந்திய அளவில் சாதனையாக பதிவானது.

    இன்றும் 200 இடங்களில் நடந்து வரும் முகாம்களில் ஏராளமான மக்கள் பயன் அடைவார்கள்.

    கடந்த ஆண்டு மழை குறைவாக இருந்தது. பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு மழை அதிகமாக பெய்தும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் தொடர் நடவடிக்கையால் பாதிப்பு குறைவாக இருந்தது.

    கடந்த ஆண்டுகளில் மக்கள் பாதிப்புகளை சொல்ல திரண்டதை பார்த்தோம். இந்த ஆண்டு திரண்டு வந்து நன்றி சொல்கிறார்கள். மழை வெள்ளம் மறைந்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    இரண்டே நாளில் மழை பாதிப்பில் இருந்து சென்னை விடுபட்டுள்ளது. தேவையான அளவு நிதியை முதல்-அமைச்சர் ஒதுக்கி தந்தாலும் அதை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகள் பெருமை தேடி தந்துள்ளனர்.

    9-ந்தேதி பெரிய அளவில் மழை வரும் என்கிறார்கள். எவ்வளவு பெரிய மழையாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

    ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. விரைவில் அந்த பணியையும் செய்து முடித்து அடுத்த ஆண்டு நூறு சதவீதம் மழை பாதிப்பு இல்லாத வகையில் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக மாநில ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அது வலுப்பெறும் தன்மையை பொறுத்து தான் அது புயலாக மாறுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.

    புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 10-ந்தேதி வியாழக்கிழமை மேலும் வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அது தமிழக கடலோரத்தின் அருகே வரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    அது வலுவடைவதைப் பொறுத்தும் மற்றும் நகரும் திசையை பொறுத்தும் அது தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழை பொழிவை கொடுக்கும் என்பது தெரிய வரும். ஏற்கனவே தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்துள்ள நிலையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    அடுத்த வாரம் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகத்தின் வட மாவட்டங்களில்தான் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குறிப்பாக சென்னையில் அடுத்த வார இறுதியில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பெரும்பாலான வானிலை ஆய்வாளர்கள் அடுத்த வாரம் சென்னையில் மழை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
    • இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தெளிய விட்டு தெளிய விட்டு போட்டு தாக்குகிறது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    புறநகர் பகுதியிலும் மழை வெளுத்து கட்டுவதால் சென்னையின் நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னைக்கு ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர் கடந்த 3 நாட்களில் பெய்த மழையால் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு வருமாறு:-

    தண்டையார்பேட்டை-14 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், கோவை, மேட்டுப்பாளையம்-12 செ.மீ., பெரம்பூர், வேதாரண்யம், காயல்பட்டினம்-10 செ.மீ.

    கயத்தாறு, கடம்பூர், சென்னை கலெக்டர் அலுவலகம்-8 செ.மீ., அயனாவரம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், ரெட்ஹில்ஸ், கடலூர் கலெக்டர் அலுவலகம்-7 செ.மீ., கோடியக்கரை, நாங்குனேரி, விருதுநகர், திருத்துறைப்பூண்டி, ஆவடி பேச்சிப்பாறை-6 செ.மீ., தூத்துக்குடி, திருக்கோவிலூர், பரணியார், நத்தம், திருவாலங்காடு-5 செ.மீ., மதுரை, துவாக்குடி, தாம்பரம், பாளையங்கோட்டை, அதிராம்பட்டினம், சிவகிரி, கொரட்டூர், வில்லிவாக்கம்-4 செ.மீ.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது.
    • 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் ஒரு இடங்களில் மழை நீர் தேங்கியது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர்.

    அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி வளாகம் மற்றும் மைதானத்திலும் மழை நீர் தேங்கி நின்றது. குளம் போல தேங்கி நின்ற மழை நீரால் 5 பள்ளிகளில் நேற்று முழுமையாக வகுப்புகள் நடைபெறவில்லை. மாணவர் பாதுகாப்பு கருதி ஒரு சில பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் 15-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் மழை நீர் தேங்கியது. அங்கு மின் மோட்டார் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காத வகையில் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் அறிவுறுத்தி உள்ளார்.

    அதைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து பள்ளி கட்டிடங்கள், கழிவறை, வகுப்பறை போன்றவற்றை ஆய்வு செய்கின்றனர். மின் கசிவு ஏற்பட்டு உள்ளதா? எனவும் பரிசோதனை செய்கின்றனர்.

    சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து சனி, ஞாயிறு தொடர் விடுமுறையும் மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த 3 நாட்களில் மழை நீர் தேங்கிய பள்ளிகளை சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் மீண்டும் நேற்று மழை பெய்ததால் ஒரு சில இடங்களில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு கொளத்தூரில் நடந்த பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று இரவு முதல் பெய்த மழையால் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. புதிதாக கால்வாய் கட்டாத பகுதியிலும் ஏற்கனவே உள்ள பகுதியிலும் நின்ற மழைநீரை மின்மோட்டார் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளது. சேரும் சகதியும் கூட அகற்றப்பட்டுள்ளது.

    மேலும் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்கள் 4 இடங்களில் நடக்கிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீர் முழுமையாக அகற்றும் பணி முடிந்தவுடன் சென்னை முழுவதும் சாலைகள் சீரமைக்கப்படும். இதற்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழை முடிந்தவுடன் சாலைகள் செப்பனிடும் பணி தொடங்கும்.

    கடந்த 10 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளாததால் தான் சென்னையில் மழைநீர் தேங்கியது. அவர்கள் அந்த பணியை செய்திருந்தால் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும். தூர்வாரும் பணியை செய்யாததால்தான் சென்னை பாதித்தது.

    முதல்-அமைச்சர் 1000 கி.மீ தொலைவிற்கு மழை நீர் கால்வாய் பணிகளை செய்ய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் தென் சென்னை, மத்திய சென்னை பகுதியில் அறவே தண்ணீர் தேங்கவில்லை.

    வட சென்னையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதுவும் ஓட்டேரி கால்வாயில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மழைநீர் தேங்கியது.

    கொளத்தூர் கன்னித்தீவு போல இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது வேறு நினைவை ஏற்படுத்துகிறது. அவர் போகிற கன்னித்தீவு வேறு. அவர் கட்சியில் தான் இருப்பதை காட்டிக்கொள்ளவே இது போன்று பேசுகிறார்.

    மழைநீர் கால்வாய் பணிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பிள்ளையார் சுழி போட்ட தாக கூறுவது தவறு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் சென்னையில் மழை வெள்ளம் பாதிக்காமல் இருக்க மழைநீர் வடி கால்வாய்க்கு அதிக நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறார்.

    நிதி ஒதுக்கி செயல்படுத்தியது யார் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள் செய்கிறோம்... செய்கிறோம்... என்றார்கள். ஆனால் கடைசி வரை செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.