என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கனமழை"

    • தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
    • கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    • சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
    • கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    சென்னை எழிலகத்தில உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னைக்கு 40 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

    * ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டதே அதீத மழைக்கு காரணம்.

    * நாளை காலை காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது.

    * பயிர்சேத விவரங்களை உடனடியாக கணக்கெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    * கனமழையால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    * தற்போதைய மழையில் 85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

    * கனமழையால் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * நீர்நிலைகள் தூர்வாராதது தொடர்பாக இ.பி.எஸ். அரசியலுக்காக பேசுகிறார்.

    * நாளை காலை வரை விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    * சென்னையில் மட்டும் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. குழுவிற்கு 30 பேர் என 330 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் தற்போது தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
    • நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்தது.

    சென்னை:

    மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், விருகம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    இதேபோல், புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், போரூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்து நீடித்தது.

    • சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
    • திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.

    அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி, கிண்டி, குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

    • தமிழகம், புதுவை பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தார் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. வடபழனி, கிண்டி, சைதாப்பேட்டை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில், அண்ணாசாலை, ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலை, திருப்போரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது.
    • சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் திடீரென கனமழை பெய்தது.

    சென்னை பாரிமுனை, தேனாம்பேட்டை, அண்ணாசாலை, ஆழ்வார் பேட்டை, அடையாறு, ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், அம்பத்தூர், ஆவடி, மயிலாப்பூர், மெரினா, சேப்பாக்கம், தியாகராய நகர், பட்டாபிராம், மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதேபோல் புறநகர் பகுதிகளான ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், செங்குன்றம், மூலக்கடை, மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

    சாலைகளின் தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    • கனமழை மற்றும் காற்று காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை.
    • வானிலை சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக விமான நிலையத்தில் தரையிறங்கின.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.

    சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய ஐதராபாத், டெல்லி, மும்பை, பெங்களூரு, கவுகாத்தி, கோவா, சிங்கப்பூர், கோவை, நாக்பூர் உள்ளிட்ட 12 விமானங்கள் கனமழை மற்றும் காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி சுற்றி வந்தன.

    அதன்பின், வானிலை சற்று சீரானதும் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.

    இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 நகரங்களுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 20 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    • தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.

    புயல் மழைக்கு அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    5 நாட்கள் கடந்த பின்பும் தற்போது வரை பல பகுதிகளில் மழைநீர் வடியவில்லை.

    வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தி.மு.க. அரசு அலட்சியப்படுத்தியதால் தான் கடும் பாதிப்பு.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும்.

    தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்த தேவையான ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை தி.மு.க. அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைக்காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.

    2015-ம் ஆண்டு புயல் பாதிப்பை அ.தி.மு.க. அரசு திறமையாக சமாளித்தது.

    பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என தெரிவித்தார்.

    • சென்னையில் கடந்த 3 நாட்களில் 14 ஆயிரம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
    • கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.

    சென்னையில் கனமழை பெய்த கடந்த மூன்று நாட்களில் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையில் 14ம் தேதி 4,967 மெட்ரிக் டன், 15ம் தேதி 4,585 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

    அதபோல், சென்னையில் 16ம் தேதி 4,941 மெட்ரிக் டன் குப்பைகள் என மொத்தம் 14,493 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

    கனமழை பெய்த நேரத்தில் சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றினர்.

    கனமழையை தொடர்ந்து தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது.  இதனால் சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    கரையைக் கடக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    கனமழையை தொடர்ந்து தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கிறது.

    மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்பு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 340 கி.மீ., தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டது.

    ஆனால், அதற்கு முன்பாகவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளது.

    தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தெற்கே, தென்கிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 18 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை- புதுச்சேரி இடையே சென்னை அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்படுகிறது. அதற்குப் பதிலாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
    ×