தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு.தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
Published on

தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கூடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் 13ம் தேதி கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com