search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat"

    • ராமர் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
    • ஆனந்தராஜ் ராமரின் மனைவியிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தேவர்குளத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 42). இவர் கடைகளுக்கு தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    தேவர்குளம் பஜார் பகுதியில் சென்றபோது அதே பகுதியில் தச்சு குடி தெருவில் வசிக்கும் ஆனந்தராஜ் என்பவர் இவரது வாகனத்தை வழிமறித்து ரூ.20 ஆயிரம் மாமூல் கொடுக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அதற்கு ராமர் கொடுக்க மறுக்கவே அவரது வீட்டுக்கு சென்ற ஆனந்தராஜ் ராமரின் மனைவியிடம் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்ததும் அங்கிருந்து ஆனந்தராஜ் தப்பி சென்று விட்டார். இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்ற ஆனந்தராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் சட்டத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். 

    கடனை திருப்பி தருவதாக பெண்ணை அழைத்து உல்லாசமாக இருந்து அதை புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஆனந்தகிரி மாரியம்மன் கோவில் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் சசிகுமார் (வயது 30). அதே காம்ப்ளக்சில் உள்ள கவரிங் கடையில் அப்சர்வேட்டரியைச் சேர்ந்த மல்லிகா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    மல்லிகாவிடம் சசிகுமார் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன் தொகையை பல முறை கேட்டு பார்த்தும் அவர் தரவில்லை. சம்பவத்தன்று சசிகுமாரின் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் மல்லிகா அவருக்கு போன் செய்தார். அப்போது தான் பணம் தயார் செய்து விட்டதாகவும் வத்தலக்குண்டுவில் இருப்பதாகவும சசிகுமார் கூறியுள்ளார்.

    மல்லிகாவிடம் வத்தலக்குண்டுவுக்கு வந்தால் பணத்தை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளார். அதனை நம்பி அவர் வத்தலக்குண்டு வந்துள்ளார். பின்னர் தனியார் லாட்ஜில் அவரை வரவழைத்து அங்கு மிரட்டி கற்பழித்தார்.
    அவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துக் கொண்டார். இனிமேல் தன்னிடம் பணம் கேட்டால் இந்த படத்தை உனது கணவரிடமும், ஊரில் உள்ளவர்களிடமும் காட்டி விடுவதாக மிரட்டினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மல்லிகா கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
    ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்றும் அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்றும் நரேந்திர சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
    மதுரா:

    உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நடிகை ஹேமமாலினிக்கு எதிராக சமாஜ்வாடி கூட்டணி சார்பில் ராஷ்டிரீய லோக்தளம் வேட்பாளர் நரேந்திர சிங் போட்டியிடுகிறார். கடந்த மாதம் 18-ந் தேதியே அங்கு ஓட்டுப்பதிவு முடிந்துவிட்டது.
    ஓட்டுப்பதிவு எந்திரங்கள், மதுராவில் மண்டி சமிதி பகுதியில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எலிகளால் ஆபத்து என்று நரேந்திர சிங் பீதியை கிளப்பி உள்ளார். எனவே, அறையை சுற்றிலும் கம்பி வலை வேலி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த அறையை நேற்று 3-வது நாளாக மாவட்ட கலெக்டர் சர்வக்ய ராம் மிஸ்ரா பார்வையிட்டார். பிறகு அவர் கூறுகையில், “எலிகளால் ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. வெளியாட்களை அனுமதிக்கக்கூடாது என்று மத்திய பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். 
    சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் தனது வீட்டில் மினி லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்களை இறக்கி கொண்டிருந்தார்.

    அப்போது சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் புருஷோத்தமன்(26), சுந்தர்ராஜன்(22), ஓமகுளம் பன்னீர் செல்வம் மகன் முரளி(30), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பரணிதரன்(28), மணி(53), சுப்புரமணி மகன் சூரியமுர்த்தி(26) ஆகியோர் அங்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ராமநாதனிடம் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், தர முடியாது என்று கூறியுளளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து ராமநாதனை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவரது மினி லாரியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ராமநாதன் காயத்துடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உள்பட 6 பேர் மீதும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தார்.
    ஆட்டோவில் குடி போதையில் தகராறு செய்தவரை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவரது மனைவி மணிமுத்து (36). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தேவாரத்தில் இருந்து மாணிக்கபுரத்துக்கு ஆட்டோவில் சென்றனர். இதற்காக தேவாரத்தைச் சேர்ந்த கூத்தபெருமாள் என்பவரது ஆட்டோவில் ஏறினர். மணிகண்டன் குடிபோதையில் இருந்தார்.

    ஊருக்கு செல்வதற்கு ரூ.500 வாடகை பேசினார். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகு 500 ரூபாய் தர முடியாது என்று ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார். தான் ஏறிய இடத்திலேயே தன்னை இறக்கி விடுமாறு மணிகண்டன் தகராறு செய்தார்.

    இதனால் கூத்தபெருமாள் ஆட்டோவில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் வழக்கு பதிவு செய்து கூத்தபெருமாளை கைது செய்தனர்.
    விருதுநகரில் சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிடுவதாக கூறி தொழில் அதிபர்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டக் கூடாது என பலரும் வலியுறுத்தி உள்ளனர்.
    விருதுநகர்:

    இன்றைய நவீன உலகத்தில் தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ள சமூக வலைதளங்கள் உதவுகின்றன. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த சில நிமிடங்களில் அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதில் சமூக வலைதளங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால் இதில் சிலர் அவதூறு கருத்துக்கள், வீடியோ பரப்புவதால் பல்வேறு பிரச்சினைகளும் எழுகின்றன.

    குறிப்பாக சட்டம்- ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டுப்போய் வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மை தானா? என்பதை அறிவதற்குள் அடி-தடியில் இறங்கி விடுகின்றனர்.

    எனவே சமூக வலை தளங்களில் அவதூறு செய்திகளை கட்டுப்படுத்திட தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், தன்னை பற்றிய அவதூறு வீடியோ விரைவில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வருகின்றன. இதனை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி பதிவுகள் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இது குறித்து விசாரணை நடத்துமாறு மேற்கு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த சூழலில் மேற்கு போலீசில் மேலும் 2 தொழில் அதிபர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், நண்பர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நாங்கள் நடனமாடினோம்.

    அதனை 3 பேர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

    சமூக வலைதளங்களில் வெளியாகும் அவதூறு செய்திகளால் சட்டம்- ஒழுங்கு கெட்டுப்போகும் அளவுக்கு விளைவுகள் ஏற்படுகிறது.

    எனவே இது வி‌ஷயத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. பாரபட்சமற்ற நடவடிக்கையால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, குற்றங்களும் தடுக்கப்படும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    காதலிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிக்கு மிரட்டல் விடுத்த வாலிபருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் திலகர் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகன் அஜித்குமார் ( வயது 21), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

    இதற்கு மாணவி மறுக்கவே நண்பர்களாக பழகுவோம் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நண்பர்களாக இருவரும் பேசி வந்துள்ளனர். இருவரும் வாட்ஸ்அப்களில் தினமும் கருத்துக்களை பரிமாறி வந்துள்ளனர்.

    இதற்கிடையே அஜித்குமார் மாணவி மீது ஒரு தலை காதல் கொண்டுள்ளார். மாணவி தனது புகைப்படத்தை வாட்ஸ்அப் முகப்பில் வைத்துள்ளார். அதனை பதிவிறக்கம் செய்த அஜித்குமார், மாணவியின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் இணைத்து செல்போனில் வைத்திருந்தார்.

    இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது அஜித்குமார் தன்னை காதலிக்காவிட்டால், உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக அஜித்குமாரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி மகிழேந்தி விசாரித்தார். இதில் அஜித்குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

    நெல்லை அருகே டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் பணத்தை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
    நெல்லை:

    நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் காமராஜ் (வயது42). இவர் சுத்தமல்லி அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்றிரவு இவர் கடையை மூடி விட்டு, விற்பனையான ரூ.1.70 லட்சம் ரொக்க பணத்தை பையில் வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    திருப்பணிகரிசல்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியது. இதில் பயந்த காமராஜிடம் கொள்ளையர்கள் ரூ.1.70 லட்சத்தையும் கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

    இது குறித்து காமராஜ் நெல்லை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்த 3 கொள்ளையர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஆலங்குளத்தில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் ஐசக்ராஜன் (வயது27). சம்பவத்தன்று இவருக்கும், சியோன் நகரை சேர்ந்த தொழிலாளி இமானு வேல்ராஜன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இமானுவேல்ராஜன், ஐசக் ராஜனை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    இதுபற்றி ஐசக்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராயக்கோட்டை அருகே இளம்பெண்ணை மிரட்டி கல்லால் தாக்கி நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    ராயக்கோட்டை:

    தருமபுரி மாவட்டம் தளவாய்அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தேவி (வயது 20). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்காக அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    நேற்று காலை தேவி காலை கடன் கழிப்பதற்காக வெளியே சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அம்பிகா என்பவர் அங்கு வந்து தேவியிடம் காதில், கழுத்தில் இருக்கும் நகைகளை கழட்டி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு தேவி கொடுக்க மறுத்தார். உடனே அம்பிகா அருகில் இருந்த கல்லை எடுத்து அவரை தாக்கினார். பின்னர் அவர் தேவியின் கழுத்தில், காதில் இருந்த ஒரு பவுன் நகைகளை பறித்துவிட்டு அவரை அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு அம்பிகா அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

    கல்லால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த தேவி வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  

    இந்த சம்பவம் குறித்து தேவி உத்தனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் இளம்பெண்ணை மிரட்டி நகை பறித்துசென்ற அம்பிகா மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    வியாபாரியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது38). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கம்பத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் வாரவட்டிக்கு கடன் வாங்கினார்.

    இதற்காக வட்டி மட்டும் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சரவணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ரவியிடம் ரூ.15 ஆயிரம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிடம் ரூ.20 ஆயிரம், ராமராஜிடம் ரூ.50 ஆயிரம், அணைப்பட்டி குட்டியிடம் ரூ.20 ஆயிரம், சிவாவிடம் ரூ.80 ஆயிரம், குணசேகரனிடம் ரூ.60 ஆயிரம், சுருளிபட்டியை சேர்ந்த இளம்பருதியிடம் ரூ.25 ஆயிரம், கே.எம்.பட்டியை சேர்ந்த ஜக்கப்பனிடம் ரூ.10 ஆயிரம், நல்லதம்பியிடம் ரூ.20 ஆயிரம், முருகனிடம் ரூ.20 ஆயிரம், மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரம் என 13 பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.

    இதனால் அவருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சென்றாயனிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த ராயப்பன்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    கேரளாவை சேர்ந்த இளம்பெண் படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டிய கன்னியாகுமரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் லைஜுன் (வயது 27).

    இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள செங்கனூர் பகுதிக்கு சென்று கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செல்போன் நம்பர் கிடைத்தது.

    இதன்மூலம் அவர் அந்த இளம்பெண்ணிடம் அடிக்கடி பேசி பழகி வந்தார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது வாட்ஸ் அப்பில் வைத்திருந்த போட்டோவை எடுத்து அதை மார்பிங் மூலம் லைஜுன் ஆபாச படமாக மாற்றி உள்ளார்.

    பிறகு அந்த போட்டோவை அந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் அனுப்பி தனக்கு பணம் தராவிட்டால் அதை மற்றவர்களுக்கு பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் இதுபற்றி தனது உறவினர்களிடம் கூறி அழுதார்.

    மேலும் வாலிபர் மிரட்டல் பற்றி செங்கனூர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து லைஜுன் கைது செய்யப்பட்டார். அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை சோதனை செய்தபோது அதில் ஏராளமான தமிழ் பெண்கள், கேரள பெண்களின் மார்பிங் ஆபாச படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அவர் வேறு பெண்களையும் இதுபோல மிரட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×