search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thenthiruperai"

    • கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.
    • தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள்.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழா கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த காணிக்கைகள் மற்றும் கோவில் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) அலுவலர் வெங்கடேஷ் முன்னிலை யில் திறந்து எண்ணப்பட்டது.

    தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை மேலாளர் பேராட்சி செல்வி, சிவா மற்றும் ஆஞ்சநேயர் உழவார பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.18லட்சத்து 95ஆயிரத்து 289 பணமும், 16 கிராம் தங்கமும், 215 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் நம்பி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் பால கிருஷ்ணன், ஈஸ்வரன், இசக்கி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதிதாசன், ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படியும், பேரூராட்சி களின் உதவி இயக்குனர் திருச்செல்வம் அறிவுறுத்தலின் படியும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்ற தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில், செயல் அலுவலர் காயத்ரி முன்னி லையில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் வார்டு உறுப்பி னர்கள் பாரதிதாசன், ராஜ லட்சுமி, ஹாஜரா பேகம் மற்றும் ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் ஆகியோர் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி யில் ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி அலுவலக ஊழி யர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.

    தென்திருப்பேரை:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்ட மைப்பு), தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் வழிகாட்டுதலின்படி அரசு, பூவரசு, புங்கன், வேம்பு, வாகை, புளி, நாவல், சரக்கொன்றை, அலங்கார கொன்றை போன்ற 10 ஆயிரம் மரக்கன்றுகளை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதன் தொடக்க விழா ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமையில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாக்கி யம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை நடைபெற்றது.

    இவ்விழாவில் ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றியக் குழு சேர்மன் ஜனகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து பேசுகையில், ஆழ்வை ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளிலும் பாதுகாப்பான, தண்ணீர் வசதி உள்ள இடங்களில் மரக்கன்றுகளை பருவ மழைக்கு முன்னதாக அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் நடவு செய்ய உள்ளோம்.

    அதேசமயம் பனை மரங்கள் பாதுகாப்பு கூட்ட மைப்போடு இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம் என கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆழ்வை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு , துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, ராஜா, தாசன் மற்றும் அலுவலக பணியாளர்கள் , பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், சிகரம் அறக்கட்டளை இயக்கு னர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
    • கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன்,பா.ஜ.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    தென்திருப்பேரை:

    திருச்செந்தூருக்கு என் மண், என் மக்கள் பாதயாத்திரையாக வருகிற 14-ந் தேதி வருகை தரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஆத்தூரில் மண்டல் தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மண்டல் பொதுச்செயலாளர் முருகன் என்ற பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், நசரேன், மாவட்ட விவசாய அணி பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ்குமார், செயலாளர் மகேஷ்வரி, பொருளாளர் சிவநேசன், ஓ.பி.சி. அணி தலைவர் பட்டுராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சசின்டன், மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு துணைத் தலைவர் முத்துலெட்சுமி, இளைஞரணி தலைவர் ராஜதுரை, சிந்தனையாளர் பிரிவு செயலாளர் பால்வண்ணன், அரசு தொடர்புதுறை மண்டல் தலைவர் பிச்சமுத்து, பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கிளைத்தலைவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
    • போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.

    தென்திருப்பேரை:

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டி மாவடி பண்ணை மக்கள் நலசங்கம் சார்பில் நடைபெற்றது.போட்டியில் மாவடி பண்ணை அணியும், மணல் மேடு அணியும் கலந்து கொண்டனர். கிரிக்கெட் போட்டியினை ஆழ்வை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    வருகிற 12, 13-ந் தேதிகளில் 30-க்கும் மேற் பட்ட அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளை யாடுகின்றன. போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி களுக்கு முறையே ரூ. 8 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் பரிசுகள் வருகிற 13-ந் (ஞாயி ற்றுக் கிழமை) வழங்கப்ப டுகிறது. மேலும் அனைத்து அணிகளுக்கும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஞானையா, கிருஷ்ணசாரதி பண்ணையார், கவுன்சிலர் ஆர்த்தி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடு களை மாவடி பண்ணை மக்கள் நல சங்கம் சார்பில் செய்து இருந்தனர்.

    • இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.
    • கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அச்சுதடிமாட சுவாமி கோவில் கொடை விழா இன்று இரவு நடைபெறுகிறது. கொடை விழாவை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி கால் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    தீர்த்தம் எடுத்து வருதல்

    நேற்று மாலை 6 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 9 மணிக்கு கும்பம் ஏற்றி குடி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாள் கொடை விழா, மதியம் 11 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணி நதியில் நீராடி வருதல், 1 மணிக்கு மஞ்சள் நீராடுதல், அதை தொடர்ந்து மதிய கொடை விழா நடைபெற்றது. இன்று மாலை 5 மணிக்கு சுவாமி மகர நெடுங்குழைக்காதர் பெருமாள் கோவிலில் இருந்து பிரசாதம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடைவிழா

    இரவு 10.30 மணிக்கு அச்சுதடிமாட சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தீபாரா தனையுடன் சாமகொடை விழா நடைபெறு கிறது. கொடைவிழாவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், நையாண்டி மேளம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    கொடைவிழாவை முன்னிட்டு இன்று காலை, மதியம் பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவும் அன்னதானம் வழங்கப்படு கிறது. கொடைவிழாவிற்கான ஏற்பாடுகளை யோகீஸ்வரர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
    • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டும், அருகில் உள்ள மரங்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து சரிசெய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் தென்திருப்பேரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கிளை தலைவர் முத்து தலைமையில் மண்டல் தலைவரும், தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலருமாகிய குமரேசன் கண்டன உரையாற்றினார்.

    தென்திருப்பேரை:

    தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் தென்திருப்பேரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் முத்து தலைமையில் மண்டல் தலைவரும், தென்திருப்பேரை பேரூராட்சி கவுன்சிலருமாகிய குமரேசன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, செயலாளர் கண்மணி, மாரிதங்கம், துணை தலைவர் கோவிந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ செல்வராஜ், கூட்டுறவு பிரிவு தலைவர் ஜெயசிங், பிரசார பிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், பிரசார பிரிவு செயலாளர் வழக்கறிஞர் பிரிவு தலைவர் கண்ணன், முருகபெருமாள், தொழில் பிரிவு செயலாளர் சபரிமலை, கலை கலாச்சார பிரிவு தலைவர் ராஜா உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ஆழ்வை கிழக்கு குரங்கணியில் கிளைத்தலைவர் முத்துலிங்கம் தலைமையிலும், ராஜபதியில் கிளைத்தலைவர் கந்தசாமி தலைமையிலும், குருகாட்டுரில் பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் ராமையா தலைமையிலும், புறையூரில் கிளைதலைவர் பாலமுருகன் தலைமையிலும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
    • இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி புறவழிச்சாலை தனியார் கார்டனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய தலைவராக ராஜ்குமார், செயலாளராக சுரேஷ் மற்றும் பொருளாளராக ஜேசா ஆகியோருக்கு முன்னாள் அரிமா ஆளுநர் கதிரேசன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    விழாவில் முன்னாள் அரிமா ஆளுநர் முருகன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சுமார் 7 பயனாளிகளுக்கு 50 கிலோ அரிசி, கல்வி பயிலும் மாணவர்கள் 3 பேருக்கு ரூ. 12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. வட்டார தலைவர் டாக்டர் ஆரோக்கிய பழம் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்கம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் நேற்று பயங்கர சூறாவளி காற்று அடித்தது.

    மின்கம்பம் சேதம்

    மகர நெடுங்குழைக்காதர் கோவில் தென்புரம் தெற்கு ரத வீதியில் சாலையோரம் உள்ள மரம் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்க ம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது. அந்த சமையத்தில் பொதுமக்கள் யாரும் அவ்வழியில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அவதி

    உடனடியாக மின் ஊழியர்கள் விரைந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புற படுத்தினார்கள். இதனால் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைபட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.

    • நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

    ஜூலை 11-ந் தேதி ஆனி கொடைவிழா நடை பெற்றது. கொடைவிழாவில் பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாள் நிகழ்ச்சி

    நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும், அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும், பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடை பெற்றது.

    தீர்த்தவாரி

    நேற்று மதியம் 1 மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், குணசேகரன், ஜெயராஜ், பெரியசாமி, சிவசுப்பிர மணியன், ஜெயசங்கர், விஜய், முத்துக்குமார், ஆனந்த், சதீஷ்குமார், பால கிருஷ்ணன், கேசவமூர்த்தி, ஜெகநாதன், ஜெயபிரகாஷ், பெரியசாமி, ஈஸ்வரன், சரவணன், ராமஜெயம், முத்துலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தக்கார் ராம சுப்பிரமணியன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனி கொடை விழாவில் விநாயகர், முத்துமாலை அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டி மன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகில் தாமிரபரணி ஆற்றின் தென்கரை யில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குரங்கணி முத்து மாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 27-ந்தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

    கொடைவிழா

    நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) காலையில் இருந்து அம்மன் தங்க திருமேனி விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். மதியம் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இரவு சிறப்பு பூஜைக்கு பின்பு நாராயண சுவாமி சிறிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முக்கிய திருவிழா நாளான நேற்று ஆனி கொடை விழாவில் விநாயகர், முத்துமாலை அம்மன், நாராயணசுவாமி, பெரியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் தங்களது உடல் குறைபாடுகள் நீங்க கோவில் வளாகத்தில் தங்கி விரதமிருந்தும், அங்க பாகங்களை மரக்கட்டையில் செய்து நேர்த்தி கடன் செலுத்தியும், மாவிளக்கில் தீபம் ஏற்றி நோயால் பாதிக் கப்பட்ட உடல் உறுப்புகளின் மீது வைத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபட்டனர்.

    இரவில் கயிறு சுற்றி ஆடுதல், மாவிளக்கு பெட்டி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பின்னர் ஆனி கொடை விழா சிறப்பு பூஜைகள், தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் இரவு 2 மணியளவில் நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.

    விழா நாட்களில் காலை, மாலை, இரவு பக்தி சொற்பொழிவு, பட்டி மன்றம், நாதஸ்வர கச்சேரி, நவீன வில்லிசை, இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் ஜெகதீசன், செல்வராஜ், முத்துமாலை, ராஜேந்திரன், சப்தசாகரன், குணசேகரன், சந்திரசேகரன், தங்கராஜ், சரவணன், கல்யாண சுந்தரம், விஜய், ஜெயராஜ், ரவி, சிவசுப்பிரமணியன், பெரியசாமி, ராகவன், கேசவமூர்த்தி, ஜெயசங்கர், ஜெகநாதன், ஜெயமுருகன், முத்து கிருஷ்ணன், ஈஸ்வரன், ராமஜெயம், ஜெகநாதன், ஜெயப்பிரகாஷ், செல்வ முத்துராமன், அர்ஜுன், பாலாஜி, கண்ணன், சதீஷ் குமார், பாலகிருஷ்ணன், முத்து லிங்கம், முத்துக்குமார், முத்துராஜா மற்றும் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கார், வேன்களில் வந்திருந்து ஆனி கொடை விழாவில் கலந்து கொண்ட னர். தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவை குண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் மேற்பார்வையில், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

    விழா எற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் ராம சுப்பிரமணியன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தி னர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தி னர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    ×