ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் பாரதிதாசன், ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர்.
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Published on

தென்திருப்பேரை:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின்படியும், பேரூராட்சி களின் உதவி இயக்குனர் திருச்செல்வம் அறிவுறுத்தலின் படியும் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் 75 மரகன்றுகள் நடும் விழா ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்ற தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில், செயல் அலுவலர் காயத்ரி முன்னி லையில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் வார்டு உறுப்பி னர்கள் பாரதிதாசன், ராஜ லட்சுமி, ஹாஜரா பேகம் மற்றும் ஆழ்வார் தோப்பு கிராம உதயம் பணியாளர் உத்திரம் ஆகியோர் இணைந்து பேரூ ராட்சி பகுதியில் 75 மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சி யில் ஆழ்வார்திருநகரி பேரூ ராட்சி அலுவலக ஊழி யர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com