என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்திருப்பேரையில் குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்
- நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
- தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்திருப்பேரை:
நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டும், அருகில் உள்ள மரங்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து சரிசெய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






