search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thenthiruperai"

    • விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    தென்திருப்பேரை:

    ஏரல் அருகே உள்ள இடை யற்காடு கிராமத்தில் முத்தா ரம்மன் கோவில் கொடைவிழா நேற்று மாலை 6 மணிக்கு திரு விளக்கு பூஜையுடன் தொடங்கியது.

    திருவிளக்கு பூஜை

    கொடை விழாவை முன்னிட்டு 308 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்து விளக்கு பூஜையை கோவை தொழிலதிபர் அஜித்ராஜ், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் கோவை மேற்கு மாவட்ட நாடார் சங்க செயலாளர் பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடை பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    கொடைவிழா

    நாளை (செவ்வாய்க் கிழமை )கொடை விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு புனித தீர்த்தம் எடுக்க செல்லுதல், 10 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்ஷண ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபுர கலச பூஜை, கோபுர அபிஷேகம், அம்மனுக்கு கலக அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பகல் 1மணிக்கு மதிய பூஜை நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கரகாட்டம், வில்லிசை நிகழ்ச்சியும், செண்டை மேளம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

    இரவு 12மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 2.30 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து உற்சவர் முத்தாரம்மன் வான வேடிக்கையுடன் சப்பரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபடு வார்கள். அன்று காலை, மாலை, இரவு 3 வேளையும் , வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை )மதியம் 12மணிக்கு மதிய கொடையும், இரவு 7 மணிக்கு ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • குளத்துக்குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.
    • அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    தென்திருப்பேரை:

    ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடையனோடை பஞ்சாயத்து குளத்துக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு தடை இன்றி குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15.55 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி, புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் அப்பகுதி மக்களிடம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    அதைத்தொடர்ந்து நாசரேத் முதலாம்மொழி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய படித்துறை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் திருக்கோளூர் பஞ்சாயத்து பால்குளம் கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை போடும் பணியையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர் எடிசன், முன்னாள் இளைஞர் அணி தலைவர் ஜெயசீலன், வட்டார தலைவர்கள் ஆழ்வார்திருநகரி கோதண்ட ராமன், ஸ்ரீவைகுண்டம் நல்லகண்ணு, வட்டார செயலாளர் நிலமுடையான், முன்னாள் நகரத்தலைவர் வக்கீல் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செய லாளர்கள் சீனி ராஜேந்திரன், சிவகளை பிச்சையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • 11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமானதும், செவ்வாய் தலமும், நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள் பாலித்த தலமாகவும் திருக்கோளூர் வைத்த மாநிதி பெருமாள் கோவில் விளங்கி வருகிறது. இங்கு வைத்தமாநிதி பெரு மாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலமும் ஆகும்.

    கொடியேற்றம்

    ஆவணி பெருந்திரு விழாவை முன்னிட்டு காலையில் உற்சவர் வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். அதை தொடர்ந்து கொடிபட்டம் மாடவீதியை வலம் வந்து கொடியேற்றம் நடந்தது.

    திருவிழா கடந்த 10-ந் தேதி காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந் தேதி வரை 11 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கருடசேவை

    5-ம் நாள் திருவிழாவான கருடசேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 9-ம் திருவிழாவான நேற்று சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தேரோட்டம்

    10 நாள் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைத்தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. திரளான பொது மக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோபாலா என கரகோசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர். இன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவான நாளை (புதன்கிழமை) பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, இளநிலை பணியாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். அர்ச்ச கர்கள் பாலாஜி, ரகு, சுந்தரம் சீனிவாசன், தலத்தார்கள் திருவாயமொழிப்பிள்ளை, ஸ்ரீதரன், சடகோபன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் கவுன்சிலர் நாகமணி மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்களுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல் நடைபெற்றது.
    • இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவிலில் சிவன், சக்தி மற்றும் முத்தாரம்மன் ஆகி யோர் தனித்தனி சன்னதி களில் அமர்ந்து அருள்பா லித்து வருகிறார்கள்.

    ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை கொடை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி கொடை விழாவை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி அம்மனுக்கு சிறப்பு அபி ஷேகம் தீபாராதனையை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து கால் நாட்டு விழா நடைபெற்றது.

    அன்று முதல் பக்தர்கள் விரதம் கடைபிடித்து வரு கின்றனர். திங்கட்கிழமை இரவு குடி அழைப்பு மற்றும் அம்மனுக்கு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது.

    மேலும் நேற்று காலை 11 மணிக்கு மேள வாத்தியங்க ளுடன் சாமி ஊர்வலத்துடன் பால்குடம் எடுத்து வருதல், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன் மதியக் கொடை, இரவு 8 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், நேர்த்தி கடன் ஆகியவை நடை பெற்றது. இரவில் வில்லிசை நிகழ்ச்சி, நாதஸ்வரம், கரகாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    காலை, மதியம் மற்றும் இரவு அன்னதானம் நடை பெற்றது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாரா தனையும் நடைபெற்றது.

    அதைதொடர்ந்து முத்தாரம்மன் பொன் சப்பரத்தில் எழுந்தருளி வாணவேடிக்கையுடன் வீதி உலா சென்று பக்தர்கள், பொதுமக்கள் தேங்காய் பழம் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

    இன்று மதியம் பொங்க லிடுதல் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏரா ளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தருளல், இரவு இந்திர வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
    • 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதைதொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில் நவதிருப்பதி தலங்களில் 8-வது ஸ்தலமானதும், செவ்வாய் ஸ்தலமும் நிதியை இழந்த குபேரனுக்கு அவனிழந்த செல்வத்தை தேடி எடுத்துக்கொண்டு, பின்னர் குபேரன் வணங்கும் ஜோதியாய் அருள்பாலித்த தலமாகும்.

    இங்கு வைத்தமாநிதி பெருமாள் தலைக்கு மரக்கால் கொண்டு சயன கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மேலும் ஸ்ரீமதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலமும் ஆகும்.

    திருவிழா

    இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தினசரி காலை வைத்தமாநிதி பெருமாள் மாடவீதி எழுந்தரு ளல், இரவு இந்திர வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அன்ன வாகனம் யானை வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது

    கருடசேவை

    14-ந்தேதி (வியாழக்கிழமை) 5-ம் நாள் திருவிழா அன்று கருட சேவையை முன்னிட்டு வைத்தமாநிதி பெருமாள் கருடவாகனத்திலும், ஸ்ரீமது ரகவி ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி மதுரகவி ஆழ்வார் எதிர்கொண்டு அழைத்தல் மங்களாசனம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    9-ம் திருவிழா நாளான 18-ந்தேதி அன்று மாலை 7 மணிக்கு தேர் கடாஷித்தல், பல்லக்கில் சுவாமி நம்மாழ்வார் ஆஸ்தானம் திரும்புதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10-ம் நாள் திருவிழாவான 19-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 7.20 மணிக்குள் சுவாமி தேரில் எழுந்தருளல், அதை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. அன்று இரவு 6 மணிக்கு பல்லக்கில் தவழ்ந்த கிருஷ்ணன் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    11-ம் திருவிழாவான (புதன்கிழமை) 20-ந்தேதி பெருமாள் தாயார் பல்லக்கில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 6மணிக்கு வெட்டி வேர் சப்பரம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, இளநிலை பணியாளர் பெருமாள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்க டாச்சாரி, கோவில் ஸ்தலத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

    தென்திருப்பேரை:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டணியினர் ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்திருப்பேரையிலுள்ள வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆழ்வார்திருநகரி வட்டாரத்தலைவர் அகஸ்டின் ஞானதுரை தலைமையில் இம்மானுவேல், சுரேஷ் நியூமேன், ஜெபா பாண்டியன், தேவசகாயம், லாரன்ஸ், தாமஸ், இர்பான் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம்நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர்.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் உத்தரவை உடனடியாகத் திரும்பபெற வேண்டும், காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் ஊதியமில்லாமல் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி ஒப்புதல் வழங்கி, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். முடிவில் பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார். ஆழ்வார்திருநகரி வட்டாரச் செயலாளர் மகேஷ் துரைசிங் உட்பட 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சண்முகப்பிரியா வரவேற்று பேசினார். ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். கருத்தரங்கில் புதுமண தம்பதியர் 25 ஜோடிகள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன், வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், பேராசிரியர் ஜேனட் சில்வியா ஜெய ரோஸ் ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு மருத்து வம், ஊட்டச்சத்து, மற்றும் சுகாதாரம் சார்ந்த ஆலோ சனைகளையும், வாழ்த்து களையும் வழங்கி னர்.

    புதுமண தம்பதிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

    விழாவில் ஆழ்வார் திருநகரி குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வை யாளர்கள், வட்டார ஒருங்கி ணைப் பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    • தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்மீக வினாடி-வினா மற்றும் அதிர்ஷ்ட போட்டிகள் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் பா.ஜ.க. சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்மீக வினாடி-வினா மற்றும் அதிர்ஷ்ட போட்டிகள் ஆழ்வை கிழக்கு மண்டல் தலைவரும், தென்திருப்பேரை 2-வது வார்டு கவுன்சிலருமான குமரேசன் தலைமையில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.அதைத்தொடந்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் கிருஷ்ண பிரசாத அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் மாரிதுரைசாமி, அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட செயலாளர் சிவசந்திரகுமார், மண்டல் பிரசாரபிரிவு தலைவர் ஆட்டோ சுப்பிரமணியன், பிரசார பிரிவு செயலாளர்கள் முருகபெருமாள், கோவிந்தராஜன், விவசாய அணி தலைவர் திருத்தணி நாதன், விவசாய அணி பொதுசெயலாளர் விக்னேஷ், செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர் செல்வன், செல்வி சந்தியா மற்றும் மகளிரணியை சேர்ந்த ஜெயலெட்சுமி உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    குரும்பூர் அருகே உள்ள அழகப்பபுரத்தில் ஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.

    கிருஷ்ண ஜெயந்தி

    கொடைவிழாவிற்கு முந்தைய நாளான 2-ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை 7 மணிக்கு குரும்பூர் ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து சிறுவர்- சிறுமியரின் ராதாகிருஷ்ணர் கோபியர் சூழ ஸ்ரீ கிருஷ்ண பகவான் சப்பரம் புறப்பட்டு வீதி உலாவாக அழகப்பபுரம் கிருஷ்ணர் கோவில் வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அன்று இரவு உறியடி திருவிழா, வழுக்கு மரம் ஏறுதல், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-ந் தேதி மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. 4-ந் தேதி இரவு 7 மணிக்கு குரும்பூர் ஶ்ரீ ஆதிநாராயண பெருமாள் கோவிலில் இருந்து கும்பம் ஏற்றுதல், குடி அழைப்பு, இரவு 11 மணிக்கு மாகாப்பு, மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கொடை விழா

    கொடை விழாவை முன்னிட்டு குரும்பூர் ஸ்ரீ தர்மசுந்தர விநாயகர் கோவிலில் இருந்து நேற்று காலை 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதல், நேமிசம் எடுத்து வருதல், காலை 10 மணிக்கு யாகசாலை பூஜை, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பகல் 12 மணிக்கு மதியக்கொடை, தீபாராதனை இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி எடுத்து வருதல், இரவு 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு படைப்பு சாமக்கொடை, தீபாராதனை நடைபெற்றது.

    இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பொங்கலிடுதல், 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பொது மக்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை அன்னதானம் வழங்கப்பட்டது. கொடை விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் அழகப்பபுரம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் லட்சுமி பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    • கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்புரம் அமைந்துள்ள பாலவிநாயகர் கோவில் கடந்த 2021-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு வருசாபிஷேக விழா நடைபெற்றது. நேற்று காலை நடைபெற்ற வருசாபிஷேக விழாவை முன்னிட்டு காலையில் பால விநாயகர் கோவிலில் வேத ஆகம விதி முறைப்படி மகா கணபதி பூஜை, லட்சுமி பூஜை, கும்ப பூஜை, யாகசாலை பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை கணேசன் பட்டர், அய்யர் ஆறுமுகநயினார் தலைமையில் நடத்தி வைத்தார். பின்பு பாலவிநாயகருக்கு சிறப்பு அலங்காரத்தில் மதிய பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர், ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரேமா, சத்துணவு மேலாளர் தனலட்சுமி, ஒன்றிய பொறியாளர் வெள்ளபாண்டியன், மேலாளர் மகேந்திரபிரபு, மகராஜன், ஆறுமுகநயினார், அருள்செல்வன், முருகபெருமாள், அழகப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், வரண்டியேல் ஊராட்சி துணை தலைவர் அருண், ஊராட்சி செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு.
    • இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி கோவில்களில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் ஆண்டுதோறும் பவுத்ரோத்ஸவம் நடைபெறுவது வழக்கம் உண்டு. கோவில்களில் தினசரி நடைபெறும் பூஜை முறைகளில் ஏதாவது விடுதல்கள் இருப்பின் அதற்கு பரிகாரங்களாக பவுத்ரோத்ஸவம் நடத்துவதும் வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பவுத்ரோத்ஸவம் கடந்த 3 நாட்கள் நடந்தது.

    இறுதி நாளான நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு சிறப்பு ஹோமம், 11 மணிக்கு பூர்ணாகுதி, நாலாயிர திவ்யப்பிரபந்தம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு ஹோமம், 7.30 மணிக்கு தங்க தோளுக்கினியானில் சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் புறப்பாடு நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ், நாராயணன், வாசு, ராமானுஜன், சீனு, ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், திருவேங் கடத்தான், அத்யாபகர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, சீனிவாசதாத்தம், நம்பி, கண்ணன், வைகுண்ட ராமன் சத்யநாராயண், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், ஆய்வாளர் நம்பி, தக்கார் அஜித் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய மேம்படுத்தப்பட்ட கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியம் லீலா, நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் 14 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜாத்தி, தானி ராஜ்குமார், மல்லிகா, பரமேஸ்வரி, ரகுராமன், மாரிமுத்து, தாமஸ், நசரேத், ஜெயா, பியூலா ரத்தினம், ஜெயகிருபா, காந்திமதி, சஜிதா, ஒன்றிய பொறி யாளர்கள் வெள்ள பாண்டி யன், சிவசங்கரன், சத்துணவு மேலாளர் தனலட்சுமி, அலுவலக பணியாளர்கள் ஆறுமுக நயினார், அருள்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×