search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthumalai Amman temple"

    • நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    • மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 27-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது.

    ஜூலை 11-ந் தேதி ஆனி கொடைவிழா நடை பெற்றது. கொடைவிழாவில் பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டி மன்றம் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    8-ம் நாள் நிகழ்ச்சி

    நேற்று 8-ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும், அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும், பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடை பெற்றது.

    தீர்த்தவாரி

    நேற்று மதியம் 1 மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலை 6மணிக்கு 1008 குத்துவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், குணசேகரன், ஜெயராஜ், பெரியசாமி, சிவசுப்பிர மணியன், ஜெயசங்கர், விஜய், முத்துக்குமார், ஆனந்த், சதீஷ்குமார், பால கிருஷ்ணன், கேசவமூர்த்தி, ஜெகநாதன், ஜெயபிரகாஷ், பெரியசாமி, ஈஸ்வரன், சரவணன், ராமஜெயம், முத்துலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, தக்கார் ராம சுப்பிரமணியன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    • முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடை பெற்றது.

    புனிதநீர்

    இதையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடை பெற்றது. அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    முத்துமாலை அம்மன்

    முத்துமாலை அம்மனுக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் அன்னதானம் நடை பெற்றது.வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும்.
    • முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் 11 நாட்கள் விழா நடக்க இருப்பதால் நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும், அம்பாள் சப்பர பவனியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 1-ம் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் அம்பாளுக்கு பூஜையும், பகல் 12 மணிக்கு பகல் பூஜையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் ரத பவனியும் இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பால் குடம்

    8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் திருநாள் அன்று இரவு அம்பாள் சப்பர பவனி உடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பல மேளதாளங்களுடன் விமரிசையாக நடைபெறும்.

    10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் பல நிறுவனங்களின் ஸ்டால்களும், மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    மேலும் காலை 4 மணி அளவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். 11-ம் திருநாள் அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் வெளி ஊர்களில் வசிக்கும் அதாவது மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல் ஊர் மக்கள் மட்டுமின்றி இந்த ஊரை சுற்றி உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் விரதமிருந்து இந்த கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். கொடியேற்று விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, அறநிலைய த்துறை ஆகிய அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ். சந்திரன், துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன், மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ×